பரந்த கூட்டணியுடன் பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்போம் - சஜித்

Published By: Vishnu

30 Dec, 2019 | 06:48 PM
image

(நா.தனுஜா)

பரந்த கூட்டணியொன்றை அமைத்து எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்கும் அதேவேளை, தற்போதுள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்தும் பாதுகாத்துத் தக்கவைத்துக் கொள்வதே பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. இயலுமாயின் அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். அதனை முன்னிறுத்தி நகர்வுக்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் நேற்று அநுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்ட சஜித் பிரேமதாஸ, அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

இந்நிலையில் தற்போது எமது தரப்பினர் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் நிலை தோன்றியிருக்கிறது. அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. பலர் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். அரசியல் காரணங்களால் சிலருக்குப் பதவியுயர்வு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சிலர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலின் போது அன்னம் சின்னத்திற்கு ஆதரவாகவும், அர்ப்பணிப்புடனும் செயலாற்றிய மக்களைத் தொந்தரவிற்கு உள்ளாக்கும் செயற்பாடுகள்  தற்போது அதிகாரத்திலிருப்பவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அவ்வாறு அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான அனைவரினதும் சார்பிலும் நாம் முன்நிற்பதுடன், அவர்களுக்கு ஆதரவாகவும் செயற்படுவோம். அதுமாத்திரமன்றி அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது அரசாங்கத்தில் இழப்பீட்டுத்தொகையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளிக்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27