கூட்­ட­மைப்புத் தலை­மையின் தவ­றான செயற்­பா­டு­களே மாற்றுத் தலை­மைக்­கான தேவையை ஏற்­ப­டுத்­தி­யுள்ளது - சுரேஷ்

30 Dec, 2019 | 01:11 PM
image


(தி.சோபிதன்)
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை பல தவறுகளை இழைத்­தி­ருக்­கின்­றது. அதனால் மக்கள் மத்­தியில் விர­க்­தியும் கோபமும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அந்தத் தலை­மையின் இத்­த­கைய செயற்­பா­டு­களே மாற்றுத் தலை­மையின் தேவையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. ஆகை­யினால் இந்த மாற்றுத் தலை­மையை மக்கள் முழு­மை­யாக ஆத­ரிப்­பார்கள் என்றே நம்­பு­கின்றோம் என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.


சம­கால அர­சியல் நிலை­மைகள் தொடர்பில் அவர் ஊட­கங்­க­ளுக்கு நேற்று கருத்­துக்­களை தெரி­விக்கும்போதே அவர் இதனை தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,
கூட்­ட­மைப்பிலிருந்த பல கட்­சி­களும் அதனை விட்டு வெளி­யே­றி­யி­ருக்­கின்­றன. தனிப்­பட்ட நபர்­க­ளென வேறு பலரும் அங்­கி­ருந்து வெளி­யே­றி­யி­ருக்­கி­றார்கள். இப்­பொ­ழுது இவர்கள் எல்­லோரையும் உள்­ள­டக்­கிய கூட்­ட­ணி­யொன்று மாற்றுத் தலை­மை­யாக அமை­ய­ுமென்று நாங்கள் எதிர்­பார்க்­கிறோம். அதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன.


ஆகை­யினால் மிக விரை­வாக அந்தப் பேச்­சு­வார்த்­தைகள் நிறை­வுக்கு வரு­மென்றும் நாங்கள் எதிர்­பார்க்­கிறோம். அவ்­வா­றான கூட்டு முன்ன­ணியில் அந்த கூட்டு முன்­ன­ணியின் கொள்­கை­களை ஏற்றுக்கொள்ளக்கூடி­ய­வர்கள் யாரையும் இணைத்துக்கொள்­ளவும் தயா­ராக இருக்­கிறோம்.
எங்­களைப் பொறுத்­த­வ­ரையில் பரந்­து­பட்ட ஐக்­கிய முன்­ன­ணி­யென்­பது அவ­சியம் என்­பதை நாங்கள் எல்­லோரும் புரிந்­தி­ருக்­கிறோம். இந்த பரந்­து­பட்ட ஐக்­கிய முன்­ன­ணியின் ஊடாகத்தான் தமிழ் மக்­களின் அடுத்த கட்ட நகர்­வு­களை மேற்­கொள்­ளலாம் என்றும் நாங்கள் நம்­பு­கின்றோம். அந்த அடிப்­ப­டையில்தான் இந்த மாற்றுத் தலை­மையைப் பற்றி நாங்கள் சிந்­தித்தோம். அதற்­கான பேச்­சு­வார்த்­தை­களும் நடை­பெற்றுக்கொண்­டி­ருக்­கின்­றன. விரைவில் அந்தப் பணிகள் நிறை­வ­டை­யு­மென்று நம்­பு­கிறோம்.


இன்­றைய கால கட்­டத்தில் விக்­கி­னேஸ்­வ­ரனின்  தலை­மை­யி­லேயே அவ்­வா­றான அணி உரு­வா­கு­மென்று நான் எதிர்­பார்க்­கிறேன். நிச்­ச­ய­மாக கூட்­ட­மைப்பின் தலைமை பல பிழை­களை விட்­டி­ருக்­கின்­றது. பல தோல்­வி­களைச் சந்­தித்­தி­ருக்­கி­றது. அவர்கள் பல விச­யங்­களை பிழை­யாக கையாண்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் எடுத்துக்கொண்ட கொள்­கையிலிருந்து மிக நீண்ட தூரம் விலகிச் சென்­றி­ருக்­கின்­றார்கள். இவ்­வா­றான பல விடயங்கள் இருக்­கின்ற நிலையில்தான் மாற்றுத் தலைமை தேவை என்ற முடி­வுக்கு எல்­லோரும் வந்­தி­ருக்­கின்றோம்.


அவ்­வா­றான நிலையில் ஒரு மாற்றுத் தலைமை என்­பது நிச்­ச­ய­மாக பாரா­ளு­மன்­றத்­திலும், மாகாண சபை­யிலும் சரி மக்­க­ளு­டைய முழு­மை­யான ஆத­ர­வுடன் ஒரு பலம் பொருந்­திய மக்கள் அமைப்­பாக அது மாற வேண்டும். அவ்­வாறு மாறினால் தான் நாங்கள் தமிழ் மக்­களின் கோரிக்­கை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு அது உகந்­த­தாக இருக்கும்.


நான் ஏற்­க­னவே கூறி­யது போன்று உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் இவை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­கான பல வேலைத் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றன. அதனை அவ்­வாறு பலம் பொருந்­திய அமைப்­பாக மக்கள் மாற்­று­மி­டத்து நிச்­ச­ய­மாக அடுத்­த­கட்ட நகர்­வு­களை நாங்கள் இல­கு­வாக மேற்­கொள்ளக்கூடி­ய­தாக இருக்கும்.


அதா­வது கீரைக்­க­டைக்கும் எதிர்க்­கடை வேண்­டு­மென்ற பழ­மொழி தமிழில் இருக்­கின்­றது. இவ்­வ­ளவு காலமும் நாங்கள்   எல்­லோரும் இணைந்து கூட்­ட­மைப்பை பலப்­ப­டுத்த வேண்டும், மக்­க­ளு­டைய ஆத­ரவை அதற்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்­ப­டையில் செயற்­பட்­டி­ருந்தோம். அதற்­க­மைய ஆத­ரவும் பெற்றுக்கொடுக்­கப்­பட்­டது. ஆனால் அந்தக் கூட்­ட­மைப்பு இன்­றைக்கு பல தவறை விட்­டி­ருக்­கின்­றது.


அந்தத் தவ­றுகள் குறித்து நாங்கள் திரும்ப திரும்ப சொல்­லியும் இருக்­கின்றோம். அந்த வகையில் ஒரு மாற்று அணி தேவை­யென்று கூறினோம். நான் கடந்த பல வரு­ட­மாக சாதா­ரண மக்­க­ளுடன் பழ­கு­கின்றேன் என்ற அடிப்­ப­டையில் பர­வ­லாக தமிழ் மக்கள் மத்­தியில் இருக்கக்கூடிய ஒரு கருத்து என்னைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் முழுக்க முழுக்க கூட்­ட­மைப்பின் மீது நம்­பிக்கையிழந்­த­வர்­க­ளாக, சம்­பந்தன் தங்­களை ஏமாற்றி விட்­ட­தாக, சம்­பந்தன் போன்­றோரால் நிறைய விச­யங்­களைச் செய்­தி­ருக்க முடியும். ஆனால் அவர்கள் எத­னையும் செய்யவில்லை என்ற ஒரு கோபம், விரக்தி, மாற்றம் இது எல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.


ஆகவே நிச்சயமாக அவ்வாறான ஒரு சூழலில் ஒரு மாற்றுத் தலைமை என்பது தவிர்க்க முடியாதது. அந்த அடிப்படையில் நிச்சயமாக தமிழ் மக்கள் அவ்வாறான ஒரு தலைமையை ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அவ்வாறான மாற்றுத் தலைமைக்கான தேவை ஏற்பட்டிருக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44