அவுஸ்திரேலியாவில் சிட்னி உள்ளடங்கலான கிழக்கு கடற்க ரையோர பிராந்தியங்களை தாக்கிய புயலால் மரங்கள் சரிந்து விழுந்ததுடன் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குயீன்ஸ்லாந்து பிராந்தியத்தில் மோசமான காலநிலை காரண மாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸில் வெள்ள அனர்த்தம் காரணமாக நூற்றுக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு பல பிராந்தி யங்கள் மின்சார துண்டிப்புக்குள்ளாகியுள்ளன.

மணிக்கு 125 கிலோமீற்றர் வேகத்தில் வீசி வரும் புயலால் சிட்னி விமான நிலையத்தின் 3 ஓடுபாதைகள் மூடப்பட்டுள் ளன. இதனால் உள்நாட்டு விமானசேவைகளும் சர்வதேச விமான சேவைகளும் பாதிப்பை எதிர்கொண்டதால் பெருந் தொகையான பயணிகளின் பயணம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் கடந்த 30 வருட காலத்தில் இடம்பெறாத அளவில் பாரிய வெள்ள அனர்த்தம் இடம்பெற வாய்ப்புள்ளதாக பிராந்திய காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.