தேசிய கீத விவ­காரம் : 13ஆவது அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரா­னது என இந்­திய அர­சியல் தலை­வர்கள் தெரி­விப்பு  

30 Dec, 2019 | 11:40 AM
image

(எம்.மனோ­சித்ரா)
இலங்­கையின் 72 ஆவது சுதந்­திர தின நிகழ்வில் சிங்­கள மொழியில் மாத்­தி­ரமே தேசிய கீதம் பாடப்­படும் என்று அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக வெளி­யா­கி­யி­ருக்கும் செய்­தி­யா­னது, தமி­ழர்­க­ளுக்கு அதி­காரப் பகிர்வை வழங்கும் இலங்கை -– இந்­திய ஒப்­பந்­தத்தின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட 13 ஆவது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது. இவ்­வா­றான செயல்கள் இலங்­கையில் தமி­ழர்­களை மேலும் தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு வாய்ப்­பாக அமையும் என்று இந்­திய அர­சியல் தலை­வர்கள்  கருத்­துத்­ தெ­ரி­வித்­துள்­ளனர்.


இலங்­கையின் 72 ஆவது சுதந்­திர தின நிகழ்வில் சிங்­கள மொழியில் மாத்­தி­ரமே தேசிய கீதம் பாடப்­படும் என்று அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கி­யமை குறித்து திரா­விட முன்­னேற்ற கழ­கத்தின் தலை­வ­ர் மு.க.ஸ்டாலின் தனது உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்டர் பக்­கத்தில் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.


அந்த டுவிட்டர் பதிவில், 'இலங்கை அர­சாங்கம் அந்­நாட்டின் சுதந்­திர நிகழ்வின் போது சிங்­கள மொழியில் மாத்­தி­ரமே தேசிய கீதம் பாடப்­படும் என்று தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றமை கவ­லை­யையும் ஆச்­ச­ரி­யத்­தையும் ஏற்­பத்­தி­யுள்­ளது.


இவ்­வா­றான செயற்­பா­டுகள் இலங்­கையில் தமி­ழர்­களை மேலும் தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு வழி வகுக்கும். எனவே இவ்­வி­வ­கா­ரத்தில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் எஸ்.ஜெய்­சங்கர் ஆகியோர் உட­ன­டி­யாக கவனம் செலுத்த வேண்டும்' என்று  வலி­யு­றுத்­தி­யுள்ளார்.


 மேலும், 'இலங்­கை தமிழ் மக்­க­ளுக்கு அவர்­க­ளது தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடு­வ­தற்­கான வாய்ப்பு மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­மை­யா­னது  தமி­ழர்­க­ளுக்கு அதி­காரப் பகிர்வை வழங்கும் இலங்கை -– இந்­திய ஒப்­பந்­தத்தின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட 13ஆவது அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரா­னது' என்று பார­திய ஜனதா கட்­சியின் கூட்­ட­ணியில் அங்­கத்­துவம் வகிக்கும் பாட்­டாளி மக்கள் கட்­சியின் தலைவர் எஸ்.இரா­மதாஸ்  தெரி­வித்­தி­ருக்­கிறார்.


ஹிந்­துஸ்தான் டைஸ்ம்ஸ் இணைய தளத்தில், 'கோத்­தாபய ராஜ­ப­க் ஷவின் அர­சாங்கம் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 4 ஆம் திகதி தமிழில் தேசிய கீதம் பாடப்­பட மாட்­டாது என்று தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் இலங்கை -– இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்' என்றும் எஸ்.இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04