கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

30 Dec, 2019 | 11:38 AM
image

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் குறித்த யுவதி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவரது உறவினர்கள் நீண்ட நேரமாகியும் யுவதியை காணாத நிலையில் தேடியுள்ளனர்.

நீண்ட நேரம் தேடியும் யுவதி கிடைக்காமையினால்  சந்தேகம் கொண்ட அவர்கள்  இளைஞர்களின் உதவியுடன் வீட்டின் கிணற்றினுள் தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போது குறித்த யுவதி நீரில் மூழ்கி சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.

குறித்த சம்பவத்தில் வவுனியா கொக்குவெளி பகுதியை சேர்ந்த சிவானந்தம் சுலக்சனபிரியா வயது 19 என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா காமினி மகாவித்தியாலத்தில் கல்வி கற்றுவரும் குறித்த பெண் அண்மையில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல் நிலை இடங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

சடலம்  உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53