வட, கிழக்கில் போட்­டி­யிடும் சாத்­தியம் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணிக்கும் உள்­ளது - மனோ

30 Dec, 2019 | 10:49 AM
image

வடக்கு, கிழக்­குக்கு வெளியே போட்­டி­யிடும் சாத்­தியம் கூட்­ட­மைப்­புக்கு இருப்­பதை போல, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் போட்­டி­யிடும் சாத்­தியம் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணிக்கும் இருக்கிறது. இதுபற்­றியும் நாம் ஆராய்­கிறோம் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின்  தலை வரும்  முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.


தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, வடக்கு– கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே போட்­டி­யி­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை குறித்தே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.


அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே போட்­டி­யிடும் சாத்­தியம் பற்றி, தமி­ழ­ரசுக் கட்சி தலைவர் மாவை எம்.பி. கூறி­யி­ருக்­கிறார். இதுபற்றி ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்­னிடம் திரும்ப, திரும்ப கேட்­கி­றார்கள்.


இன்று நேற்­றல்ல, பல மாதங்­க­ளுக்கு முன்­ன­மேயே நான் இது­பற்றி "கூட்­ட­மைப்பு  இங்கே வந்து தாரா­ள­மாக போட்­டி­யி­டட்டும். அதற்­கான உரிமை அவர்­க­ளுக்கு இருக்­கி­றது" என கூறி­யுள்ளேன். இதை எம்.பி. மாவை­யிடம் நேர­டி­யா­கவே கூறியும் உள்ளேன்.


ஒரு­வேளை, நம்­மு டன் இணைந்து போட்­டி­யிட வேண்­டு­மென அவர்கள் விரும்­பு­வார்­க­ளாயின், இதுபற்றி அதி­கா­ர­பூர்­வ­மாக எமக்கு கூட்­ட­மைப்பு எழு­து­மானால் நாம் அது தொடர்பில் எமது அர­சியல் குழுவில் கலந்­து­ரை­யாடி எமது நிலைப்­பாட்டை அறி­விக்­கலாம்.


அதேபோல் வடக்கு–கிழக்­குக்கு வெளியே போட்­டி­யிடும் சாத்­தியம் கூட்­ட ­மைப்­புக்கு இருப்­பதைப்போல, வடக்கு– கிழக்கு மாகா­ணங்­களில் போட்­டி­யிடும் சாத்­தியம், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணிக்கும் இருக்­கி­றது. இது பற்­றியும் நாம் ஆராய்­கிறோம்.


எதிர்­வரும் பாரா­ளு­மன்­றத்தில் எப்படி தமிழ் எம்­.பி.க்­களின் தொகையை அதி­க­ரிக்­கலாம் என்­பது பற்றி கூட்­ட­மைப்­புடன் மட்டுமல்ல, அனைத்து அணி தமிழ் கட்சிகளுடனும் நாம் பேச விரும்பு கிறோம்.
இதுபற்றி ஜனவரி முதல் வாரத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூடி முடிவெடுக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24