வீட்டிலிருந்த தாலிக் கொடியை திருடிய வீட்டுபணிப் பெண் கைது 

Published By: Digital Desk 4

30 Dec, 2019 | 10:41 AM
image

மட்டக்களப்பு அரசடி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் 10 பவுண் தாலிக் கொடியை திருடிய  வீட்டு பணிப்பெண் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்துள்ளதுடன் திருடப்பட் தாலிக்கொடியை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த பகுதியிலுள்ள வீட்டின் அறையிலுள்ள அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 பவுண் கொண்ட தாலிக் கொடி ஞாயிற்றுக்கிழமை (29) காணாமல் போயுள்ளது இதனையடுத்து வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்ட பணிப் பெண் மீது சந்தேகம் கொண்டு அவர் காலையில் வீட்டிற்கு சென்ற போது அவரிடம் கேட்ட போது அவர் அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்றார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த பணிப் பெண் தான் திருடியதாக ஒப்புக் கொண்டு திருடிய தாலியை வீட்டின் பழைய சாமான்கள் வைக்கப்படும் குளிர்சாதன பெட்டி உன்றில் மறைத்து வைத்திருந்ததுடன் தாலியில் இருந்த தாலிக்காயை தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். ஏன தெரியவந்ததையடுத்து திருட்டுப்போன தாலிக் கொடியை பொலிசார் மீட்டதுடன் 35 வயதுடைய பணிப் பெண்ணை கைது செய்துள்ளனர் 

குறித்த வீட்டிற்கு கடந்த ஒரு வாரம் புதிதாக வேலைக்கு சென்றுள்ளதாகவும் சம்பவதினம் குறித்த அறையை துப்பரவு செய்யுமாறும் அன்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாகவும் தினமும் சந்தி செளியிலுள்ள தனது வீடு சென்று வேலைக்கு வருவதாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாணையில் தெரியவந்துள்ளது 

இந் சம்பவத்தில் கைது செய்யப்பட் பணிப் பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40