காணிகளில் குடியேறாதவர்களின் காணிகளை சுவீகரியுங்கள் - வவுனியா அரச உத்தியோகத்தர் குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

29 Dec, 2019 | 02:24 PM
image

வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தமது குடியிருப்பு பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிளை சுவீகரித்து காணியற்றவர்களுக்கு வழங்குமாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

8 வருடங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களில் காணியற்றவர்களுக்கு என ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு 800 இற்கும் அதிகமானவர்கள் குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் தற்போது வரையில் அக்குடியிருப்பு பகுதியில் 87 குடும்பங்களே வசித்து வருவதனால் ஏனைய பகுதிகள் பற்றைக்காடுகளாகவும் மக்கள் நடமாட்டமற்ற பகுதியாகவும் காணப்படுவதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலான நிலை காணப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் குறித்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவில்லை. எனவே காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கவேண்டும் எனவும் காணிகளில் குடியிருக்காதவர்களின் காணிகளை சுவீகரித்து உண்மையில் காணி அற்றவர்களுக்கு வழங்கி அப்பகுதியில் மக்கள் அச்சமின்ற வாழ வழிவகை செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த குடியிருப்பு பகுதிக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறும் குடிநீர் பிரச்சனைக்கு தாம் முகம் கொடுப்பதுடன் வீதிகளும் கிரவல் வீதிகளாக காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

சுமார் 2 மணிநேரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தாம் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட வேண்டி ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47