விஷ ஊசிகளை ஏற்றி, நாய்களை வேட்டையாடி கறி சமைத்து விற்றவர் கைது.!

Published By: Vishnu

29 Dec, 2019 | 12:14 PM
image

சீனாவில் உண­வக உரி­மை­யாளர் ஒருவர் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிரா­ணி­களை வேட்­டை­யாடி உண­வ­கங்­களில் கறி­ச­மைத்து விற்ற சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

இரண்டு மணி நேரத்­துக்குள் எட்டு நாய்­களை வேட்­டை­யா­டிய குற்­றச்­சாட்டின் பேரில் சீன உண­வக உரி­மை­யாளர் ஒரு­வ­ரையே அந் நாட்டு பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

சென் என அறி­யப்­பட்ட குறித்த சந்­தேக நபர் விஷ ஊசி­களால் நாய்­களை சுட்டுக் கொன்­றது விசா­ர­ணை­களில்  தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த 15ஆம் திகதி காலையில் ஜாங்­ஜி­யா­காங்கில் உள்ள பெங்வாங் என்ற நக­ரத்தைச் சுற்றி மோட்டார் சைக்கிளில் சந்­தே­கத்­துக்­கி­ட­மாக சுற்றித் திரிந்­த­தையும் நாய்களை விஷ ஊசி ஏற்றும் துப்­பாக்­கியால் சுடு­வ­தையும் கண்டு பொது­மக்கள் பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­வித்­துள்­ளனர்.

தக­வ­ல­றிந்து சம்­பவ இடத்­துக்கு விரைந்த பொலிஸார் சந்­தேக நபரை  கைது செய்­துள்­ளனர். 

நாட்டில் குளிர்­கா­லத்தில் நாய் இறைச்சி அதிக விலைக்கு விற்­கப்­ப­டு­கின்­றது. இத­னா­லேயே உண­வக உரி­மை­யாளர் நாய்­களை திரு­டி­யுள்ளார் என்றும் மக்கள் நாய் இறைச்சிகளை விரும்பி உண்ணும் காலமாக இது காணப்படுகின்றது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right