ஸ்ரீதலதா மாளிகையை விட உயரத்தில் பள்ளியின் கோபுரம் : சிங்கள அமைப்பு ஆர்ப்பாட்டம்

Published By: Robert

05 Jun, 2016 | 03:52 PM
image

கண்டி நகரின் சிறைச்சாலை வீதியில் அமைந்துள்ள பிரதான ஜும்மாப் பள்ளி வாசல்களில் ஒன்றான கண்டி லைன் பள்ளி (மர்கஸ்)யில் அமைப்பதற்காக ஏற்கனவே திட்டமிடப்படிருந்த உயர் கோபுரமான ‘மினராவை’ அமைக்க வேண்டாம் எனக் கூறி சிங்கள ‘ஜாதிக பெரமுவ’ என்னும் அமைப்பு இன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபட்டது.

மேற்படி பள்ளி அமைந்துள்ள வீதியை இடைமறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் வாகனங்களை வேறு பாதையினூடாகத் திருப்பி அனுப்பியுள்ளனர். 

ஆர்பாட்டக்காரர்கள் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

சிங்கள பௌத்தர்களின் உயர் ஸ்தானத்திலிருக்கும் ஸ்ரீதலதா மாளிகையை விடவும் கூடிய உயரத்தில் பள்ளியின் கோபுரத்தை அமைக்கப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்று காலை பள்ளிவாசலின் முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சத்தமிட்டு குறித்த பள்ளியின் நிர்மான பணிகளை நிறுத்த உத்தரவாதம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். (நிர்மானப்பணிகள் ஏதும் இடம் பெறாத நிலையில்)

பொலிஸார் தலையிட்டு, கண்டி மாநகரசபை ஆணையாளரின் கடிதத்தை சமர்ப்பித்ததும் அவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றுள்ளனர். 

குறித்த கடிதமானது, கண்டி மாநகர சபையின் அனுமதியின்றி எவ்வித அபிவிருத்தியும் செய்யக் கூடாது என ஏற்கனவே தடை விதிக்கப்பட்டதாகும். 

இவ்வார்ப்பாட்டத்திற்கு அரம்பேபொல ரத்னசாரர் என்ற பௌத்த மதகுரு தலைமை தாங்கியுள்ளார். இன்னும் பல அமைப்புக்களும் இணைந்திருந்தன.

அமைச்சர் றவூப் ஹகீம் அவர்களது அனுசரனையுடன் நிர்மான வேலைகள் முன் எடுக்கப்படுவதாகவும் பிலிமத்தலாவையிலுள்ள பித்தளை கைத்தொழில் முயற்சியாளர்களிடம் அதற்கான உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இது, ஸ்ரீ தலதா மாளிகையை விட 28 அடி உயரமான கோபுரம் என்றும் ஆப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

(வத்துகாமம் நிருபர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14