வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்வ­ரனை அப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­மாறு கோரும் அதி­காரம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னுக்கு இல்­லை­யென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் மக்கள் சார்ந்த விட­யங்­களில் வட மாகாண முத­ல­மைச்சர் உறு­தி­யாக இருப்­ப­தா­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் இவ்­வாறு கோரிக்கை முன்­வைப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக்­களின் ஊடகப் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் அவுஸ்­தி­ரே­லிய தனியார் வானொ­லி­யொன்­றுக்கு அளித்­துள்ள செவ்­வியில் வடக்கு முத­ல­மைச்சர் தொடர்பில் வெளி­யிட்ட கருத்துத் தொடர்பில் வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு அவர் தெரி­வித்தார்.


அவர் மேலும் தெரி­விக்­கையில்,


வட­மா­காண சபைத் தேர்­தலின் போது முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை நிறுத்­துவோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்மானம் எடுத்த பின்னர் இறுதியாக நான் உட்பட கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் சென்று விக்­கி­னேஸ்­வ­ரனை தேர்­த­லுக்கு அழைத்­து­வந்­தி­ருந்தோம். அனை­வரும் ஒன்­றி­ணைந்து அவரை வெற்­றி­பெறச் செய்­தி­ருந்தோம்.


தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்­சி­களின் ஏக­தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் வட­மா­காண முதல்­வ­ராக அமர்த்­தப்­பட்ட ஒரு­வரை அக்­கட்­சி­களின் தீர்­மா­ன­மின்றி தனி­யொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் கோரிக்­கைக்கு அமை­வாக எவ்­வாறு பதவி விலக்க முடி யும். ஆகவே இவ்­வா­றான கோரிக்­கையை முன்­வைப்­ப­தா­னது அடிப்­ப­டை­யற்­ற­தொன்­றாகும்.


அதே­நேரம்இ தமிழ் மக்கள் தொடர்­பிலான விட­யங்­களில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் கொள்­கை­க­ளு­டனும்இ தீர்­மா­னங்­க­ளு­டனும் வட மாகாண முத­ல­மைச்சர் ஒரு மித்தே செயற்­ப­டு­கின்றார். குறிப்­பாக கூறு­வ­தானால் இலங்­கையில் இடம்­பெற்ற மனி­தா­பி­மான சட்டமீறல்கள்இ மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம். வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்­தினர் வெளியேற்­றப்­பட வேண்டும், நிரந்­தர அர­சியல் தீர்வு எட்­டப்­பட வேண்டும் உள்­ளிட்ட பல விட­யங்­களில் ஒரே நிலைப்­பாட்­டி­லேயே முத­ல­மைச்சர் காணப்­ப­டு­கின்றார்.


இவ்­வா­றி­ருக்­கையில், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தாது உள்­ளக விசா­ர­ணையை வர­வேற்று கருத்­துக்­களை உள்­நாட்­டிலும் வெ ளிநாட்­டிலும் வெளியிட்டு வரு­கின்றார். இது­போன்று மற்றும் பல விட­யங்­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் முத­ல­மைச்­ச­ரி­னதும் நிலைப்­பா­டு­க­ளுக்­கெ­தி­ரான கருத்­துக்­களை கொண்­டி­ருக்­கின்றார். இதன் கார­ண­மா­கவே முத­ல­மைச்­ச­ருக்­கெ­தி­ராக அவரை நீக்க வேண்டுமென்று கருத்தை சுமந்திரன் முன்வைத்திருக்கலாம்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தீர்மானங்கள் அவற்றின் தலைவர்களின் முடிவுகளுக்கு ஏற்பவே முதலமைச்சர் தொடர்பான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.