ஐ.தே.க. பிளவுபடக்கூடாது ; விரைவில் பாரிய தேசிய கூட்டணி - மனோ!

Published By: Vishnu

29 Dec, 2019 | 11:07 AM
image

ஐக்கிய தேசியக் முன்னணி என்ற கூட்டணிக்குள்ளேயே இன்னும் பல புதிய கட்சிகளையும், சக்திகளையும் உள்வாங்கி பாரிய தேசிய கூட்டணியொன்றை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிளை முன்னெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த மனோகணேசன்,

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானக் கட்சியாகக் கொண்டு ஏனைய பங்காளிக் கட்சிகளை உள்வாங்கி ஐக்கிய தேசிய முன்னணி என்ற ஒரு கூட்டணி தற்போதும் உள்ளது. 

இந்த ஐக்கிய தேசிய முன்னணி என்ற பாரியக் கூட்டணிக்குள்ளேய இன்னும் பல புதிய கட்சிகளையும், சக்திகளையும் உள்வாங்கி பாரிய தேசியக் கூட்டணியொன்ற‍ை உருவாக்க நாம் முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். 

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளை மையமாகக் கொண்டு அந்த பெரிய கட்சியை பிரித்து, பிறிதொரு கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நாம் உடன்படி முடியாது. 

உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்படக்கூடாது. அவ்வாறு பிளவு ஏற்படாவிட்டால் தாம் நாம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும். 

அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்படவிருந்த பிளவுகளை நாம் ஏற்கனவே முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இன்னும் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கும் சுமூகமாக தீர்வினை காண்போம்.

இதேவேளை வெகு விரைவில் பாரியதொரு மகா தேசியக் கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்காளிக் கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெலஉறுமைய போன்ற கட்சிகளுக்கிடையில் பேச்சுவாரத்தை இடம்பெற்று வருகின்றது. 

எனினும் இது தொடர்பான இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை முழுமையாக எடுக்கப்படவில்லை. 

ஹரின் பெர்னாண்டோவின் கருத்தானது அவரது தனிப்பட்ட கருத்தாகும், அவர் கட்சித் தலைவர் அல்ல. எனினும் அவரையும் உள்வாங்கிக் கொண்டு பாரிதொரு கூட்டணியை உருவாக்க நாங்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19