விசாகா, ஆனந்தா, தேவி பாலிகா முத­லிடம்: அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ

Published By: J.G.Stephan

29 Dec, 2019 | 08:52 AM
image

நா.தனுஜா

கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வு­க­ளின்­படி புதிய பாடத்­திட்­டத்தின் கீழ் விஞ்­ஞா­னப்­பி­ரிவில் கொழும்பு விசாகா கல்­லூரி மாணவி சச்­சினி மலிஷா விஜ­ய­வர்­த­னவும், கணி­தப்­பி­ரிவில் கொழும்பு ஆனந்தா கல்­லூரி மாணவன் தனுஷ ஷிஹான் பொன்­சே­காவும், கலைப்­பி­ரிவில் கொழும்பு தேவி­ பா­லிகா வித்­தி­யா­லய மாணவி ஷொனி மிலிந்து வெலி­க­ம­கேவும், பொறி­யியல் தொழில்­நுட்பப் பிரிவில் கம்­பஹா பண்­டா­ர­நா­யக்க வித்­தி­யா­ல­யத்தைச் சேர்ந்த வினுர ஓஷத கால்­ல­கேவும் அகில இலங்கை ரீதியில் முத­லி­டத்தைப் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

இவ்­வ­ருடம் ஆகஸ்ட் மாதம் கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்­றி­யி­ருந்த பரீட்­சார்த்­தி­களின் பெறு­பே­றுகள் நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை இலங்கை பரீட்சை திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

இம்­முறை நாட­ளா­விய ரீதியில் புதிய பாடத்­திட்­டத்தில் 1 இலட்­சத்து 87 ஆயி­ரத்து 167 பரீட்­சார்த்­தி­களும், பழைய பாடத்­திட்­டத்தில் 94 ஆயி­ரத்து 619 பரீட்­சார்த்­தி­களும் மொத்­த­மாக 2 இலட்­சத்து 81 ஆயி­ரத்து 786 பேர் பரீட்­சைக்கு தோற்­றி­யி­ருந்­தனர்.

இவர்­களில் புதிய பாடத்­திட்­டத்தில் பரீட்­சைக்கு தோற்­றிய 1 இலட்­சத்து 13 ஆயி­ரத்து 637 பேரும், பழைய பாடத்­திட்­டத்தில் பரீட்­சைக்கு தோற்­றிய 67 ஆயி­ரத்து 489 பேரு­மாக மொத்தம் 1 இலட்­சத்து 81 ஆயி­ரத்து 126 பேர் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு விண்­ணப்­பிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். புதிய பாடத்­திட்­டத்தில் தோற்­றிய 42 பேருக்கும், பழைய பாடத்­திட்­டத்தில் தோற்­றிய 29 பேருக்கும் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­ப­டாமல் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

பெறு­பேற்றுச் சான்­றி­தழைப் பெறல்

பெறு­பேற்றுச் சான்­றி­தழ்­களை பெற்­றுக்­கொள்ளும் போது வெளி­நாட்டு மற்றும் உள்­நாட்டு உயர் கல்­வியை தொடர்­வ­தற்கு நாளை 30 ஆம் திகதி முதல் இணை­ய­தளம் மூலம் (ஒன்லைன் மூலம்) விண்­ணப்­பிக்க முடியும் என்று இலங்கை பரீட்சை திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. நாளை முதல் பரீட்சை திணைக்­க­ளத்­துக்கு நேர­டி­யாக விஜயம் செய்து ஒரே நாளில் அல்­லது குறிப்­பிட்ட காலத்­துக்குள் பெறு­பேற்று சான்­றி­தழை பெற்­றுக்­கொள்ள முடியும் என்றும் அது மேலும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.

பரீட்சை திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­ய­த­ளத்­துக்குள் பிர­வே­சித்து இலங்கை தபால் சேவையின் ஸ்பீட் மெயில் (Speed Mail) சேவையில் விண்­ணப்­பிப்­பதன் மூலம் உள்­நாட்­டுக்குள் 48 மணித்­தி­யா­ல­யங்­க­ளுக்குள் உயர்­தர பெறு­பேற்று சான்­றி­தழைப் பெற்­றுக்­கொள்ள முடியும். அதே­போன்று EMS சேவை மூலம் வெளி­நா­டு­களில் வசிப்­ப­வர்கள் பெறு­பேற்றுச் சான்­றி­தழை பெற்­றுக்­கொள்­ளலாம்.

ஜய­வர்­த­ன­புர மற்றும் கொழும்பு வல­யங்­க­ளுக்கு உட்­பட்ட பாட­சா­லை­களின் அதி­பர்­க­ளுக்கு நேற்று சனிக்­கி­ழமை காலை 10 மணிக்கு முன்னர் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய பாட­சா­லை­க­ளுக்கும் நேற்­றைய தினமே தபால் சேவை மூலம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தனியார் பரீட்­சார்த்­தி­க­ளுக்கு வீடு­க­ளுக்கு அனுப்­பப்­படும் என்றும் பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு விண்­ணப்­பிக்­கலாம்
இந்­நி­லையில் எதிர்­வரும் ஜன­வரி 17 ஆம் திகதி வரை மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு விண்­ணப்­பிக்க முடியும். பாட­சாலை மூலம் பரீட்­சைக்கு தோற்­றி­ய­வர்கள் பாட­சாலை அதி­பர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்­களை பெற்றுக் கொள்ளும் அதே வேளை, தனியார் பரீட்­சார்த்­திகள் பரீட்சை திணைக்­களம் அல்­லது அரச பத்­தி­ரி­கைகள் மூலம் விண்­ணப்­பங்­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

இவை தொடர்­பான மேலதி விப­ரங்­களை பரீட்சை திணைக்­க­ளத்தின் 011-2784208, 011-2784573, 011-3188350, 011-3140314 என்ற தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு தொடர்பு கொள்­வதன் மூலமும், 1911 என்ற அவ­சர தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைப்பு விடுப்­பதன் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.


அகில இலங்கை ரீதியில் முத­லிடம் பெற்றோர்
அந்­த­வ­கையில் வெளி­யான உயர்­தரப் பரீட்­சை­பெ­று­பே­று­க­ளின்­படி அகில இலங்கை ரீதியில் முத­லிடம் பெற்ற மாண­வர்­களின் விப­ரங்கள் வரு­மாறு:

புதிய பாடத்­திட்­டத்தின் கீழ் விஞ்­ஞா­னப்­பி­ரிவில் கொழும்பு விசாகா கல்­லூரி மாணவி சச்­சினி மலிஷா விஜ­ய­வர்­த­னவும், கணி­தப்­பி­ரிவில் கொழும்பு ஆனந்தா கல்­லூரி மாணவன் தனுஷ ஷிஹான் பொன்­சே­காவும், கலைப்­பி­ரிவில் கொழும்பு தேவி­பா­லிகா வித்­தி­யா­லய மாணவி ஷொனி மிலிந்து வெலி­க­ம­கேவும், பொறி­யியல் தொழில்­நுட்­பப்­பி­ரிவில் கம்­பஹா பண்­டா­ர­நா­ஙக்க வித்­தி­யா­ல­யத்தைச் சேர்ந்த வினுர ஓஷத கால்­ல­கேவும் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதேபோன்று பழைய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் கணிதப்பிரிவில் பின்னவெல மத்திய மகா வித்தியாலய மாணவன் தர்ஷன இசுறு சிறிசம்பத்தும், வர்த்தகப் பிரிவில் பத்தேகம கிறிஸ்தவ ஆண்கள் பாடசாலை மாணவன் நிரோஷன் சந்தருவனும், கலைப்பிரிவில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய மாணவன் எச்.ஏ.நிபுணவும் அகில இலங்கை மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றிருக்கின்றனர். 






முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02