மனித பாவனைக்குதவாத மழைநீரினால் சேதமடைந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 7 ஆயிரத்து 225 கிலோ கொத்தமல்லியை தம்புளை பிரதேச அரிசி ஆலையொன்றிலிருந்து தம்புளை பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர். 

மக்கள் பாவனைக்குதவாத பெருமளவு கொத்தமல்லி மீண்டும் மக்கள் பாவனைக்கு சந்தைக்கு வருவதற்காக அரிசி ஆலை ஒன்றில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தபோதே, அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது. 

இவை வெல்லம்பிட்டிய பிரதேசத்திலிருந்த பொருளாதார மத்திய நிலையம் ஊடாக அரிசி ஆலைக்கு எடுத்து வரப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.