நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் மாணவர்களை இலக்காக கொண்டு சதித்திட்டங்கள்  : பிரதமர் விசனம்

Published By: R. Kalaichelvan

27 Dec, 2019 | 05:25 PM
image

(செ.தேன்மொழி) 

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த மக்களை சீர்குலைப்பதற்காகவும் , அனைத்தின மக்களின் குடும்ப நிலைமைகளை பாதிப்படையச் செய்து பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையில் காணப்படும் உறவையும் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் காணப்படும் தொடர்பினையும்  , பிள்ளைகள் மதங்களுடன் கொண்டுள்ள தொடர்பினையும் சீர்குழைப்பதற்காக எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசனம் வெளியிட்டார்.

  

மாணவர்களின் பாடப்புத்தங்களில் இது போன்ற பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு செயற்படுபவர்கள் தொடர்பில் இணங்கண்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். 

அகில இலங்கை அறநெறி பாடசாலை பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை வவுனியா - இரட்டைபெரிய குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த பிரதமர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அடிப்படைவாதத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். 

இன்று பௌத்த அறநெறிகளில் கல்வி கற்றுவரும் பிள்ளைகளே நாளை பௌத்த சமயத்தை அடையாளப்படுத்தப் போகின்றனர். சிங்கள பௌத்த கலாசாரம் தொடர்பில் இவர்கள் விகாரைகளினூடாகவே கற்றுக் கொள்கின்றனர். இதேபோல் நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் பாடசாலை கல்வியினூடாகவே மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.

இன்று பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற பாடப்புத்தகங்களிலும் அவர்களின் மனதை பாதிக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பல தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில பாடப்புத்தகங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் ஒரு மாகாணமாக காட்டப்பட்டுள்ளதாகவும் ,  சிங்கள புத்தாண்டு தொடர்பான படங்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46