மக்களே எச்சரிக்கை ! உடனடியாக முறையிடுமாறு வேண்டுகோள் !

Published By: R. Kalaichelvan

27 Dec, 2019 | 02:51 PM
image

தெரியாத சர்வதேச தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் மிஸ் கோல் (Missed calls) தவறுதலான  அழைப்புக்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவ்வாறான அழைப்புகள் தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாறு இனம்தெரியாத வெளிநாட்டு இலக்கங்களில் இருந்து அழைப்புகள் வந்தால் குறித்த இலங்கங்களுக்கு மறுபடியும் அழைப்பினை ஏற்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்திருக்கும் தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு, இதுபோன்ற அழைப்புகள் வந்தால் குறித்த இலக்கங்களை உடனடியாக  1700 என்ற இலக்கத்தினூடாக குறுச்செய்தியை (SMS) அனுப்பி தம்மிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு இனம்தெரியாத வெளிநாட்டு  தவறவிட்ட தொலைப்பேசி அழைப்புகள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவ்வாறு அழைப்புக்களை மேற்கொள்வோர், இலங்கையில் தொலைபேசிகளை பயன்படுத்துவோரை இலக்காக கொண்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்படும் தவறிய அழைப்பை (Missed calls) விடுத்து இவ்வாறு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக 10235,646,2532 ,10212,621-001782 இவ்வாறான இலக்கங்களுக்கு பதிலளிக்கும் பொழுது இவர்களது தொலைபேசி கணக்கிற்குள் பெருந்தொகை பணம் தொலைபேசி அழைப்பை மேற்கொள்பவர்களிடம் இருந்து மோசடி செய்யப்படுகின்றது.

இவ்வாறான தவறிய அழைப்பிற்கு பதிலளித்த இலங்கையில் தொலைபேசியை பயன்படுத்துயோர் இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் சபையிடம் முறையிட்டுள்ளனர்.

இது குறித்து ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் 10235,646,2532 ,10212,621-001782 என்ற இலக்கங்களில் இருந்தே மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறான தவறிய அழைப்புகள் ஏதேனும் வந்தால் உடனடியாக 1700 என்ற இலக்கத்திற்கு குறிஞ்செய்திகள் மூலம் தெரியப்படுத்த முடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24