யமனாக வந்த பஸ் : முச்சக்கர வண்டி சாரதி பலி

Published By: MD.Lucias

04 Dec, 2015 | 04:00 PM
image

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்குடா சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  மற்றும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

 

கண்டல்குடா பாடசாலை சந்தியில் தனியார் பயணிகள் பஸ் வண்டி முச்சக்கர வண்டியுடன்  மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.

விபத்தில் உயிரிழந்த கல்பிட்டியைச் சேர்ந்த முஹம்மது சேக்காலி ரெஜீனா பீவி (வயது 53) என்ற நான்கு பிள்ளைகளின் தாயான பெண் தனது மருமகனுடன் அவரது முச்சக்கரவண்டியில் மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை கண்டல்குடா பிரதேச வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இவ்வேளை நீர்கொழும்பிலிருந்து கல்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் மற்றொரு பஸ்ஸூக்கு வழிவிடுவதற்காக முற்பட்டுள்ளதுடன் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டபோது முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.  

இவ்விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் மற்றும் அவரது மருமகன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கல்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் படுகாயத்திற்குள்ளான பெண் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மேலதிகச் சிகிச்சைக்காக கல்பிட்டி வைத்தியசாலையிலிருந்து புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இவ்விபத்துச்சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கல்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்பிட்டி பொலிஸார் இவ்விபத்து  தொடர்பில் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58