உடல் உள்ளுறுப்புகள் பதித்த ஆடையை அணிந்து பாடம் நடத்தும் ஆசிரியை

Published By: Digital Desk 3

27 Dec, 2019 | 12:36 PM
image

ஸ்பெயின் நாட்டில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்த பாடம், எளிதாக புரிவதற்காக, உடல் உள்ளுறுப்புகள் பதித்த ஆடை அணிந்து வந்து பாடம் கற்பித்து வருகிறார்.

ஸ்பெயினிலுள்ள வாலாயோலிட் பகுதியை சேர்ந்த 43  வயதுடைய  வெரோனிகா டியூக் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர், 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆங்கிலம், ஸ்பானிஸ், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களை கற்பித்து வருகிறார்

இந்நிலையில் மாணவர்களுக்கு உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்த பாடம் எடுக்க, விநோதமான முறையை அவர் கையாண்டார். உடல் உள்ளுறுப்புகள் பதித்த உடை அணிந்து வந்த அவர், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படி பாடம் கற்பித்தார்.

  

அன்றைய தினம் தன் மனைவியுடன் பாடசாலைக்கு சென்ற வெரோனிகாவின் கணவர், இதனை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பலரும் அவரது இம்முயற்சியை பாராட்டினர். வரலாறு, மொழி பாடங்களை கற்பிக்கும் போதும், வெரோனிகா இதுபோல வித்தியாசமான முயற்சிகளை கடைபிடிப்பார் என கூறப்படுகின்றது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right