பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கில் ஜனாதிபதி - மஹிந்த தேசப்பிரிய 

Published By: Vishnu

26 Dec, 2019 | 06:45 PM
image

(ஆர்.யசி)

இம்முறை பொதுத் தேர்தலை நடத்த 650 கோடி தொடக்கம்  700 கோடி ரூபாய்கள் தேவைப்படும் எனவும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பே இந்த செலவுகளுக்கு காரணம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கத்தில் இருக்கின்றார் என்பது அறிய முடிகின்றது. 

அப்படியென்றால் மார்ச் மாதம் முதலாம் திகதி கலைத்தாலும் அன்றில் இருந்து ஒன்றைரை மாத காலத்துக்கு தேர்தல் பிரசார காலம் முன்னெடுக்கப்படும்.  

இந்த கால கட்டத்தில் தேர்தல் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும், ஜனாதிபதி தேர்தலை போல் அல்லாது பொதுத் தேர்தலில் செய்ய முடியாது. 

ஆகவே இந்த விடயத்தில் கடினத்தன்மை இருக்கும். 2019 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பெயர் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும். 18 வயதை தாண்டிய வாக்காளர்கள் பெயர் பட்டியல் வழமையாக  பெப்ரவரி  மாதத்தில் தான் முன்னெடுக்கப்படும். 

மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும். 

எனினும் பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானமும் தேர்தல் நடத்தும் திகதியும் ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். 

எவ்வாறு இருப்பினும் தேர்தல் நடத்த சிறந்த தினம் 23 ஆம் திகதி என்றே நாம் நினைக்கின்றோம். ஜனாதிபதி எப்போது தீர்மானம் எடுத்து தேர்தலை அறிவித்தாலும் கடமையை ஆரம்பிக்க நாம் தயாராகவே உள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:10:33
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51