சூரிய கிரகண அதிசயம் ; உரலில் நின்ற உலக்கை

Published By: R. Kalaichelvan

26 Dec, 2019 | 06:25 PM
image

நெல்லை மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, உரலில் வைத்த உலக்கை ஆடாமல், அசையாமல் அப்படியே நின்ற அதிசய சம்பவம் நடந்தது.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

சூரிய கிரகண நேரத்தில் சாப்பிடக் கூடாது, கர்ப்பிணிகள் சந்திர கிரகணத்தை பார்க்கக் கூடாது, கோயில்களில் நடை திறந்திருக்க கூடாது என்பது ஐதீகம்.

அதுபோல், சூரிய கிரகணத்தின்போது கடலில் கொந்தளிப்பு மற்றும் நிலப் பகுதிகளில் சில ஆபூர்வ நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், மிகவும் அரிதான சூரிய கிரகணம் இன்று காலை 8.06 மணிக்கு தொடங்கி, பகல் 11.16 வரை சுமார் 3 மணிநேரம் நீடித்தது.

இதன்போது, திருநெல்வேலி அருகேயுள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த வசந்தி என்பவர் வீட்டிலும், கடையநல்லூரைச் சேர்ந்த அருள் லெட்சுமி என்பவரது வீட்டிலும் ஒரு உரலில் உலக்கை செங்குத்தாக நிற்க வைத்தனர்.

சூரிய கிரகணம் முடிவடையும் வரை, அந்த உலக்கை ஆடாமல் அசையாமல் உரலின் மீது அப்படியே நின்று கொண்டிருந்தது. இந்த அதிசய சம்பவத்தை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

இதே போல், தமிழகத்தின் சில பகுதிகளில் தாம்பாளத் தட்டில் தண்ணீர் ஊற்றி, அதன்மீது உலக்கை நிறுத்தப் பட்டிருந்தது.

இது குறித்து பெரியவர்கள் கூறுகையில், "கிரகணம் பிடிக்கும்போது மட்டும்தான் உலக்கை செங்குத்தாக ஆடாமல் அசையாமல் நிற்கும். இதன் மூலம், எவ்வளவு நேரம் கிரகணம் பிடித்திருந்தது என்பதை தெரிந்துகொள்ளலாம்” என்று, தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right