அரசாங்கத்தை கேள்விக் கேட்கக்கூடிய பலமான எதிர்கட்சியை உருவாக்க வேண்டும் - அனுர

Published By: Vishnu

26 Dec, 2019 | 04:49 PM
image

(செ.தேன்மொழி)

அரசாங்கத்தை கேள்விக் கேட்கக்கூடிய பலமான எதிர்கட்சியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுப்பது குறித்து மக்கள் நன்கு சிந்தித்துச்செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள சோலிஸ் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 

அரசாங்கம் தேர்தல் காலங்களின் போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகவே தற்போது செயற்பட்டு வருகின்றது. மக்கள் சுமையின்றி வாழுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்துள்ளனர். இது குறித்து அரசாங்கத்தின் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினால் அதற்கு பொறுப்பற்ற முறையில்  பதிலளித்து வருகின்றனர். 

அரசியின் விலையை அதிகரித்துள்ளனர். ஆனால் நெல்லின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா ? இல்லையே அதனால் நெல் உற்பத்தியாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள் தொடர்பிலும் , அவற்றை இரத்து செய்யவேண்டும் என்பது தொடர்பிலும் தேர்தல் காலத்தின் போது பெரிதும் பேசிவந்தனர். அப்போது எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் அவர்கள் பெரிதும் அவதானம் செலுத்தியிருந்தனர்.

ஆனால் தற்போது கோத்தாபய அதனை பரிசீலனை செய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளார். இவர்கள் இவ்வாறு கூறியா அரசாங்கத்தை கைப்பற்றினார்கள்? இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே அதனை இரத்து செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து பரிசீலனை தொடர்பில் பேசி வருகின்றனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடத்துக்கு குத்தகைக்கு விடுவது தவறுஎன்றும் தெரிவித்து வந்தனர். இதற்கு மாறாக கோத்தாபய அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கையளிப்பதே சிறந்தது என்று தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரங்களில் தாங்கள் சூழல் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அவதானம் செலுத்துவதாக காட்டிக் கொண்டனர், தேர்தல் வெற்றியை அடுத்து அதனை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர். 

மணல் மற்றும் மண் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்துள்ளனர். அதனால் ஆற்று கரையோரங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்வதினால் மணல் மற்றும் மண்ணின் கொள்வனவு விலை குறைந்துள்ளதா இல்லையே? அப்படியென்னறால் அரசாங்கம் ஏன் இந்த அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தது?

தேர்தல் காலங்களின் போது தனக்கு ஆதரவளித்த ஒரு சிலரின் நம்பிக்கையை பேணுவதற்காகவும் தனது அரசியல் இலாபத்திற்காகவும் அரசாங்கம் மணல் கடத்தல் காரர்கள் மற்றும் , நெல் , அரிசி கடத்தல் காரர்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. இதனை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38