சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 15 வருடமாகியும் இதுவரை கையளிக்கப்படவில்லையென மக்கள் கவலை

Published By: Digital Desk 4

26 Dec, 2019 | 04:35 PM
image

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 15 ஆண்டுகளாகியும் இவ் அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இதுவரை கையளிக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அக்கரைப்பற்று பிரதேச மக்களின் நலன் கருதி சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதி மூலம் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் இதுவரை மக்களுக்கு கையளிக்கப்படாமல் உள்ளது.

சுனாமி பேரலையின் கோரத் தாண்டவத்தினால் அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக் கணக்கான வீடுகள் அழிந்தொழிந்தன. அக்கரைப்பற்று-பத்ர் நகர்ப் பிரதேசத்திலேயே சுனாமியின் பாதிப்புக்கள் பதிவாகி இருந்தன.

இதற்கமைவாக, முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரஃபின் முயற்சியின் பயனாக சவுதி அரேயிய நாட்டின் ஸகாத் நிதியினைக் கொண்டு சுனாமியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆலிம் நகர் கிராமத்திற்கு அண்மையில் அமைந்துள்ள நுரைச்சோலைப் பிரதேசத்தில் சுமார் 60 ஏக்கர்  நிலப்பரப்பில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதான நவீன வீடமைப்புத் திட்டமொன்று உருவாக்கப்பட்டது.

இவ் வீடமைப்புத் திட்டத்தினை உருவாக்கும் பொருட்டு, கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் திகதி இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன்பிரகாரம் சுமார் 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதியினைக் கொண்டு நவீன முறையில் 500 வீடுகள் இங்கு நிர்மாணப்பட்டன. சில காரணங்களின் அடிப்படையில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 14 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை இவ்வீடுகள் உரியர்களுக்கு வழங்கப்படாமலிருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இக்கிராமத்தில் மகளிர் பாடசாலை, ஆண்கள் பாடசாலை, நவீன வைத்தியசாலை, பாரிய மண்டபத்துடனான சனசமூக நிலையம், பள்ளிவாசல், பஸ் தரிப்பு நிலையங்கள், விளையாட்டு மைதானம், நவீன சந்தைக் கட்டடங்கள் மற்றும் நவீன ஒய்வறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட இங்குள்ள வீடுகளும் பொது நிறுவனங்களின் கட்டடங்களும் விலங்கு, பறவைகள் மற்றும் விசஜெந்துக்களின் வாழிடமாக மாறி வருகின்றன.  இக்கட்டடங்களில் பெருந் தொகையான நிதி கொண்டு பொருத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானவை சேதமடைந்தும் காணப்படுகின்றன.

பற்றைக் காடுகளால் மூடப்பட்டு விஷ ஜெந்துக்களின் உறைவிடமாகவும் மாறியுள்ள இவ்வீடமைப்புத் திட்டத்தில் பல்வேறு சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் வீடுகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் பிரகாரம் இவ்வீடுகள் கையளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டதுடன், இவ்வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் இவ்வீடுகள் இன விகிதாசார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கிணங்க, அவ் இன விகிதாசாரம் என்பது இலங்கையின் இன விகிதாசாரமா?, மாவட்டத்தின் இன விகிதாசாரமா?, பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று மக்களின் இன விகிதாசாரமா? என்ற தெளிவு மக்களுக்கு கிடைக்காமையால் இவ்வீடுகள் பகிர்ந்தளிப்பில் மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

உறவினர்கள் இல்லங்களிலும், அயலவர்கள்; நண்பர்கள்; வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக பல்வேறு இன்னல்களுடன் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருவதுடன், வீடுகள் கிடைக்காமல் சிலர் மரணமடைந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாக உள்ளது. சொல்லொண்ணா துயருடன் தமது வாழ்வினை நகர்த்தி வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வீடுகள் கையளிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02