கோத்­த­பாயவின் வெற்றியால் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வித அசம்­பா­வி­தமும் இல்லை: அனைத்தும் போலி பிர­சா­ரமே..!

Published By: J.G.Stephan

26 Dec, 2019 | 12:08 PM
image

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் பழிவாங்­கப்­ப­டுவர் என ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் போலித்­த­ன­மா­னதும் விஷ­மத்­த­ன­மா­ன­து­மான பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆனால்,  கோத்­த­பாய ராஜபக் ஷ வெற்றி பெற்றும் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக எவ்­வித அசம்­பா­வி­தமும் இடம்­பெ­ற­வில்லை.



மாறாக சக­ல­ருக்­கு­மான பாது­காப்பு  உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று ஸ்ரீலங்கா சம­ச­மாஜக் கட்சி பொதுச்­செ­ய­லா­ளரும் ஆளு­ந­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார். ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்­ன­ரான நிலை­மைகள் தொடர்பில் கருத்­து­ரைக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சாரக் காலத்­தின்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும்  ஐக்­கிய தேசியக் கட்­சியும் இணைந்து கோத்­த­பாய ராஜபக் ஷ வெற்­றி­பெற்றால் வெள்ளை வேன் கலா­சாரம் உரு­வாகும் என்று போலித்­த­ன­மா­னதும் விஷ­மத்­த­ன­மா­ன­து­மான பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டனர்.

அது மட்­டு­மல்­லாமல், முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றை நடத்தி இரண்டு நபர்­களை அழைத்து வந்து கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் உத்­த­ரவின் பேரி­லேயே வெள்ளை வேனில் தமிழ் மக்­களை கடத்­திச்­சென்று கொலை செய்­த­தாகக் கூறப்­பட்­டது.

தற்­போது அது பொய் என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அதன் சார­திகள் என சந்­தே­கத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர். விசா­ர­ணை­களின் இறு­தியில் உண்மை தெரி­ய­வரும்.

கோத்­த­பாய ராஜபக் ஷ இன­வாதி அல்ல. தான் எதிர்­பார்த்­த­ளவு தமிழ் மக்கள் வாக்­க­ளிக்­க­வில்­லை­யென்­றாலும் அம்­மக்­களை அர­வ­ணைத்து நாட்டை அபி­வி­ருத்தி செய்வேன் என அவர் பதவியேற்ற தினத்தில் கூறி­யது வர­வேற்­கக்­கூ­டிய விடயம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி மூன்று பிரிவுகளாக செயற்படுவதால் பொதுஜன முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றும். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33