மடுவில் வெற்றி வாகை சூடிய மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் !!

Published By: Robert

05 Jun, 2016 | 09:28 AM
image

மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கும் மெதடிஸ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான “பாடுமீன்கள் சமரில்” மெதடிஸ் மத்திய கல்லூரி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

புனித மைக்கேல் கல்லூரிக்கும் மெதடிஸ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான பாடுமீன்கள் சமர் பிக் மட்ச் நேற்று காலை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இதனையடுத்து வெற்றி வாகை சூடிய மெதடிஸ் மத்திய கல்லுரியின் ஆதரவாளர்கள் வீதி ஊர்வலமாக கல்லடியில் இருந்து மட்டக்களப்பு  மெதடிஸ் கல்லூரிக்கு வரும் பொழுதே ஆதரவாளர்களுக்கும் மட்டக்களப்பு பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக 30 நிமிடம் வரை பாதையை மறித்து தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, தலை கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஆதரவாளர்களது மோட்டார் சைக்கிள்களை மட்டக்களப்பு பொலிஸார் பறிமுதல் செய்ததன் காரணமாகவே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இறுதியில் வீதி போக்குவரத்து போலிஸார் மோட்டார் சைக்கிளை விடுவித்ததன் பின்னர், குறித்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- சசி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15