100 தங்கப்பதக்கங்களுக்கு குறி ; தயார்படுத்தலுக்கு கருவூலத்திடம் ரூ.50 மில்லியன் கோரல்

Published By: Vishnu

26 Dec, 2019 | 11:48 AM
image

(எஸ்.ஜே.பிரசாத்)

14ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களில் 100 தங்கப்பதக்­கங்­களை வென்­றெ­டுப்­பதே எமது அடுத்த இலக்கு என்றும், அதற்­கான தயார்ப்­ப­டுத்­தல்­களில் முதலில் பயிற்­சி­யா­ளர்கள் குறித்த கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக விளையாட்டு அபி­வி­ருத்தி திணைக்களத்தி­ன் பணிப்­பாளர் தம்­மிக்க முத்­து­கல தெரி­வித்தார்.

அத்­தோடு இதற்­காக 50 மில்­லியன்  ரூபா பணத்தை கரு­வூ­லத்­திடம் கோரி­யுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

நேபா­ளத்தில் அண்­மையில் நடை­பெற்று முடிந்த 13ஆவது தெற்காசிய விளை­யாட்டு விழாவில் இலங்கை 40 தங்கப்பதக்கங்களை வென்­றது. 

இந்­நி­லையில் எதிர்­வரும் 2021 ஆம் ஆண்டு 14 ஆவது தெற்­கா­சிய விளை­யா­ட்டு விழாவை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றெடுக்க தமது இலக்கை நிர்­ண­யித்­துள்­ளது. 

நடை­பெற்று முடிந்த தெற்­கா­சிய விளை­யாட்டு விழா குறித்தும் எதிர்­கால இலக்கு குறித்தும் விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. அதில் பேசிய விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் தம்­மிக்க முத்­து­கல,

அடுத்த தெற்­கா­சிய விளை­யாட்டு விழாப் போட்­டி­களில் 100 தங்கப்­ப­தக்­கங்­களை வென்­றெ­டுப்­பதே எமது அடுத்த இலக்­காக உள்ளது. அதற்கு வீர, வீராங்­க­னை­க­ளுக்கு முத­லாவதாக சிறந்த பயிற்சி­யா­ளர்­களை நாம் நிய­மிக்­க வேண்டும். அதற்­கான விசேட வேலைத்­திட்டம் ஒன்றை ஆரம்­பிக்­க­வுள்ளோம். அத்­தோடு தற்­போது நமது வீர, வீராங்­க­னை­க­ளுக்கு பயிற்­சி­ய­ளித்து வரும் வெளி­நாட்டு பயிற்­சி­யா­ளர்கள் குறித்தும் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும்.

கடந்த முறை நடை­பெற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை கரப்­பந்­தாட்ட அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்­தது. ஆனால் இம்­முறை வெளி­நாட்டு பயிற்­சி­யா­ளரின் கீழ் பங்­கேற்ற இலங்கை கரப்­பந்­தாட்ட அணி பெரி­தாக சோபிக்­க­வில்லை. அதனால் பயிற்­சி­யா­ளர்கள் குறித்து நாம் கவனம் செலுத்­த­வுள்ளோம்.

அதனால் வீரர்­க­ளுக்கு முன்­ன­தாக நாம் பயிற்­சி­யா­ளர்­களை தயார்ப்ப­டுத்த வேண்டும். அவர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிக்­க­வேண்டும். வெளிநாட்டு பயிற்­சி­யா­ளரை கொண்டு வந்து நம்­நாட்டு பயிற்சியாளர்­களை மேம்­ப­டுத்­தவும், எமது பயிற்­சி­யா­ளர்­களை வெளிநா­டு­க­ளுக்கு தயார்ப்­ப­டுத்­தவும் நாம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதற்காக கருவூலத்திடமிருந்து 50 மில்லியன் ரூபா பணத்தை கோரியுள்ளோம்.

இவ்வாறு நாம் தயாராகாவிட்டால் 100 தங்கப்பதக்கங்களை வெல்லும் இலக்கை அடைய முடியாது என்று தம்மிக்க முத்துகல தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05