மூன்றாம் பாலினத்தவருக்காக முதல் பல்கலைக்கழகம் இந்தியாவில்...

Published By: Daya

26 Dec, 2019 | 10:03 AM
image

இந்தியாவிலேயே முதல் முறையாக உத்திரபிரதேசத்தில் மூன்றாம் பாலினத்தவருக்காகப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் கல்வி உட்பட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனாலும், அனைத்து தடைகளையும் தாண்டி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதித்த வண்ணம் உள்ளனர். 

கல்வித் துறையைப் பொருத்தவரை மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று தனியாகப் பள்ளிகளோ, கல்லூரிகளோ, பல்கலைக்கழகங்களோ இந்தியாவில் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனால் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர போதிய வாய்ப்புகள் கிடைக்காமலிருந்து வருகிறது.

இந்நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கென பிரத்யேகமாக ஒரு பல்கலைக்கழகமே தொடங்கப்படவுள்ளது. 

அகில இந்திய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்வி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்படவுள்ள இந்த பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பிலிருந்து முதுகலை பட்டப்படிப்பு வரை வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. பி.எச்.டி. எனப்படும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு படிப்புகளும் இந்த பல்கலைக்கழகத்தில் பயிலலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினவர்த்தவர்களால் வளர்க்கப்பட்ட இரண்டு குழந்தைகள் வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி இங்கு அனுமதிக்கப்படுவார்கள். பெப்ரவரி, மார்ச் மாதவாக்கில் இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என இந்த அறக்கட்டளையின் தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17