கண்டி உற்பத்தி வரி பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் தரமற்றமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகையிலை தொகை  கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 8 பேருக்கும் ஒரு லட்சத்து 90ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகையிலை தொகை தம்புள்ளை, கலேவல மற்றும் வஹகோட்டை போன்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருவதாக விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது.

குறித்த சட்டவிரோத நடவடிக்கைகள் புகையிலையின் விலை அதிகரிக்கப்பட்டதன் பின் அதிகரித்துள்ளதாகவும் கண்டி உற்பத்தி வரி பிரிவினர்  தெரிவித்தனர்.