நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் சம்பிக்க!

Published By: Vishnu

25 Dec, 2019 | 04:15 PM
image

(நா.தனுஜா)

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்துச் சம்பவமொன்றுக்காக கைதுசெய்யப்பட்ட நேற்றுமுன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான சம்பிக்க ரணவக்க இன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத அனுஷ்ட்டான நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க,

2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றியடைந்தது. எமது ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த 9 தேரர்கள் ஊடாகவே அவர்களுக்குப் பெரும்பான்மையைப் பெறமுடிந்தது. 

அவ்வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்குவதற்கே தீர்மானித்திருந்தார்கள். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குமாறு ஜாதிக ஹெல உறுமயவின் 9 தேரர்களும், நாங்களும் குரல்கொடுத்தது மாத்திரமன்றி, அதுகுறித்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வேண்டுகோளையும் முன்வைத்தோம். அதற்காக நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம்.

அதேபோன்று 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்ற வேகத்துடன் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்லிலும் அவர்கள் வெற்றியடைவதற்காக மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து நாமும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காகவும் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54