புதிய அரசியல் கலாச்சாரத்திற்கு முரணாக செயற்படவில்லை : ரோஹித 

Published By: R. Kalaichelvan

25 Dec, 2019 | 03:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் செயற்படவில்லை. புதிய அரசியல் கலாச்சாரத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிமுகப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை, மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கான பிடியாணை ஆகியவற்றில் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது என   சக்திவலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருக்கும் போது  அரசியல் பழிவாங்கல் எவ்வாறு இடம் பெற்றன என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பெயரளவில் மாத்திரமே  ஜனநாயகம் பின்பற்றப்பட்டன. 

தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து  அரசியல் பழிவாங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதன் விளைவினையே இன்று எதிர் தரப்பினர் அனுபவிக்கின்றார்கள்.

 பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமையும்,  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு விடுக்கப்பட்டுள்ள பிடியாணை  இடைக்கால அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கள் என்று எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

கடந்த காலத்தில் அலரிமாளிகையில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்று கூடி ஒரு நபரை இலக்கு வைத்து கைது செய்யுமாறு  சட்டமாதிபர் திணைக்களத்தின் முக்கிய தரப்பினருக்கு அழுத்தம் கொடுத்ததைப் போன்று நாங்கள் நீதித்துறையின் அடிப்படை கட்டமைப்பிற்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை.  முறையான விசாரணைகளின் ஊடாகவும், நீதிமன்றத்தின் அனுமதியின் ஊடாகவுமே தற்போது கைதுகள் இடம் பெறுகின்றன.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியினர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள். ஆட்சியமைத்தவுடன்  ராஜபக்ஷர்களையும், அவரது சகாக்கலையும் சிறைக்கு அனுப்புவதாகவும் பகிரங்கமாக குறிப்பிட்டார்கள். பிறர் மீது  பொய்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சேறு பூசும் விதமாகவே அவர்களின் தேர்தல் பிரச்சாரம் அக்காலக்கட்டத்தில் காணப்பட்டன.

முறையற்ற அரசியல் செயலொழுங்கினை வெறுத்த மக்கள்  ஜனாதிபதியாக  கோத்தபய ராஜபக்ஷவை தெரிவு செய்து ஐக்கிய தேசிய கட்சியை புறக்கணித்தார்கள்.  தற்போது புதிய அரசியல் கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களின் எதிர்பார்ப்பிற்கு முரணாக செயற்படவில்லை. தவறான வழிமுறைகளின் ஊடாக இந்த மக்களாணையினை பெற்றுக் கொள்ளவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10