இனமத பேதங்களை கடந்து குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் - வவுனியா நகரசபை உறுப்பினர்

Published By: Digital Desk 4

25 Dec, 2019 | 01:44 PM
image

இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண் ஊழியரை தாக்கிய இளைஞர் தண்டிக்கப்படுவதுடன் நகரசபைக்கு சொந்தமான குறித்த கடையினை சபை மீள பெறவேண்டும் என்று வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம் தெரிவித்தார்.

Image result for வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம்

வவுனியாவில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் தாக்கபட்டமை தொடர்பாக இன்று அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நகரசபைக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள கடையில் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தாய் இளைஞர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த கடையை நடாத்துபவரின் மகனால் இச்சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவ்வாறான சம்பவம் தொடர்ச்சியாக குறித்த நபரால் மேற்கொள்ளபடுவதை அறியும்' போது பேரதிர்ச்சியாக இருப்பதுடன் கோபமூட்டுவதாகவும் அமைந்துள்ளது. 

பாரதூரமான அடிப்படை மனித உரிமை மீறலான இச்சம்பவத்தை குறித்த வட்டாரத்தின் நகரசபை உறுப்பினர் என்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றேன். குறித்த  குற்றவாளி சட்டத்திற்குட்பட்டு கடுமையாக தண்டிக்கபடவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

அக் கடை அமைந்துள்ள காணியானது நகரசபைக்கு சொந்தமான காணியாக இருப்பதால் காணிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து நகரசபை குறித்த காணியை மீளப்பெறநடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் அடுத்த சபை அமர்வில் அதறற்கான தீர்மானத்தை கொண்டு வரவுள்ளேன் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன். 

மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும்' வவுனியாவில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்களின் மூலம் இந்த ஒற்றுமை வலுவிழந்து போகும் சூழ்நிலையும் எற்படலாம். எனவே இனமத பேதங்களை கடந்து குற்றவாளி தண்டிக்கபட வேண்டியதுடன் குறித்த நகரசபை காணியினை மீளப்பெற சபையிலுள்ள மூவினத்தையும் சேர்ந்த உறுப்பினர்களும்' நான் கொண்டுவரும் தீர்மானத்தினை ஏகமனதாக ஆதரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றேன். என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22