(சதீஸ்)

புகையிரதப் பயணிகளின் பயணச்சீட்டை பரிசோதிக்கின்ற பரிசோதகர்கள் கட்டாயமாக சீருடை அணிந்திருக்க வேண்டுமென்றும் குறித்த சீருடையில் அடையாள அட்டை பொருத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் அடையாள அட்டையை உறுதிப்படுத்தும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் தம்மை மக்களிடம் அடையாளப்படுத்துவதற்கே  சீருடையில் அடையாள அட்டையை பொருத்த வேண்டுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது

மேலும் புகையிரதப் பயணச்சீட்டின்றி பயணம் செய்பவர்கள் அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் அவர்களுக்கு பிணை வழங்குதல் மற்றும் அபராதம் செலுத்தாதவர்களை    பொலிஸில் கையளித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு கூடுதல் அதகாரம் வழங்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.