“பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில்  வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வீதி ஒழுங்கைப் பேணி நடக்க வேண்டும்”

Published By: Digital Desk 4

25 Dec, 2019 | 11:05 AM
image

வலிமேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில்  வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வீதி ஒழுங்கைப் பேணி நடக்க வேண்டும் என வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் த.நடனேந்திரன் அறிவித்துள்ளார்.

Image result for street shops in colombo

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வீதி ஒழுங்கைப் பேணி நடக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. வியாபார நிலையங்களிற்கு முன்னால் பாதசாரிகளின் போக்குவரத்திற்கு இடையூறாக பொருட்களை வெளியே வைத்து விற்பனை செய்வது காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது அவற்றை அனுசரித்து நடக்குமாறு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அறியத்தருகின்றேன் எனத் தெரிவித்தார்.

(தெல்லிப்பழை)

வலிதென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரம் தொழில் முயற்சிகளை மேற்கொள்வோர் 2020 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும் என வலிதென்மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் அ.ஜெபநேசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபையின் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சூழல் பாதுகாப்பு சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில் வலிதென்மேற்கு பிரதேசசபையின் நிர்வாகப் பிரதேசத்தில் விதந்துரைக்கப்பட்ட வியாபாரம் அல்லது தொழில்களுக்கு சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படுகின்ற பொறுப்பு எமது சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் வலிதென்மேற்கு  பிரதேசசபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தினை பெற்றுக் கொள்ளவும் ஏற்கனவே உரிமத்தினைப் பெற்றுக் கொண்டவர்கள் உரிமம் கலாவதியாகியிருப்பின் அதனைப் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

வலுவிலுள்ள சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் இல்லாமல் மேற்குறிப்பிடப்பட்ட தொழில்களை மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு தண்டப்பணமும் அறவிடப்படும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58