கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பிரதேசத்தில் வாடிக்கையாளர்களுக்கு பாவணைக்கு உதவாத ஒரு தொகை தேயிலை தூள்களை விநியோகம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் விஷேட படைப் பிரிவின் தலைமையக முகாம் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சுற்றி வளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இதன்போது, 218 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 6010 கிலோகிராம் தேயிலை மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட லொறியையும் பொலிஸ் விஷேட படைப் பிரிவு கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.