இலங்கைக்கு கடத்த இருந்த 12 கிலோ கேரள கஞ்சா நடுக்கடலில் பறிமுதல்

Published By: Digital Desk 4

24 Dec, 2019 | 04:48 PM
image

இராமேஸ்வரம் பாம்பன் மற்றும் தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளில் சுற்றியுள்ள தீவுகளில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தொடர்ச்சியாக  கடலட்டை, தங்கம் , கஞ்சா, போதை மாத்திரைகள், பீடி சுற்றும் இலைகள் போன்றவை கடத்தப்பட்டு வருகிறன.

இராமநாதபுரம் கடல் வழியாக கடத்தல் சம்பவத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து 24 மணி நேரம் ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் நேற்று திங்கட்கிழமை (23) மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய   தகவலையடுத்து காவல் துணை ஆய்வாளர் மற்றும் காவல் துறை  அதிகாரிகள் பாம்பன் தெற்கு கடற்கரையில் இருந்து தனி படகு மூலம் பாம்பன் அருகே உள்ள தீவுகளில் சோதனை நடத்தினர்.

இதன் போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு  படகை   (நாட்டுபடகு) நோக்கி சென்ற போது அவர்கள் தங்கள் கையில் இருந்த ஒரு மூட்டையை கடலில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

அந்த மூட்டையை எடுத்து சோதனை செய்தபோது அந்த மூட்டையில் ஆறு பாக்கெட்களில்  சுமார் 12 கிலோ கஞ்சா மற்றும் ஜி.பி.எஸ் (திசைகாட்டும் கருவி)இருந்தது தெரியவந்தது.

மேலும், தப்பிச் சென்றவர்களை பிடிப்பதற்காக அவர்களை விரட்டி சென்ற போது கடத்தல்காரர்கள் மூன்று பேர் படகில்  இருந்து கடலில் குதித்து மாயமாகினர்.

இதனையடைத்து நாட்டு படகையும், கஞ்சாவையும் பாம்பன் தெற்கு வாடி கடற்கரைக்கு எடுத்து வந்த  பாம்பன்  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்ட  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மாவட்ட காவல் துறையின் சிறப்பு எண்ணிற்க்கு பொது  மக்கள் அளித்த  தகவல் அடிபடையில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்த இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து நடுக்கடலுக்கு சென்ற  காவல் ஆய்வாளர்கள் திறமையுடன் செயல்பட்டு அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  கடத்தல் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு கடுமையான முயற்சி செய்தும் கடத்தல்காரர்கள் மற்றும் முக்கிய குற்றவாளிகள் தப்பியதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பரிமாற்றத்திற்காக இலங்கையில் இருந்து யாரேனும் வருகிறார்களா அல்லது இந்தப் பகுதிகளில் வேறு இடங்களில்  கடத்தல்காரர்கள் மறைந்து உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடத்தல் சம்பவங்களை தடுக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.மாவட்ட காவல்துறை அளித்துள்ள தொலைபேசி எண்ணால் பல சட்டவிரோத சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08