இன்­னமும் புரி­யாத உண்மை

24 Dec, 2019 | 04:41 PM
image

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ கடந்த திங்­கட்­கி­ழமை ஊட­கங்­களின் ஆசி­ரி­யர்­களைச் சந்­தித்துப் பேசிக் கொண்­டி­ருந்த போது, பேச்­சோடு பேச்சாக புதி­ய­தொரு குற்­றச்­சாட்டை முன்வைத்திருக்­கிறார்.

ஜனா­தி­பதித் தேர்தல் முடிந்து சரி­யாக ஒரு மாதம் கழித்து அவர் இந்தக் குற்­றச்­சாட்டைக் கூறியிருக்கிறார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் சுதந்­தி­ர­மாக வாக்­க­ளிப்­ப­தற்கு தமிழ்க் கட்­சிகள் விட­வில்லை என்­பது அவ­ரது குற்­றச்­சாட்டு. முஸ்லிம் கட்­சி­களும் அவ்­வாறே செயற்­பட்­டன என்றும் அவர் குறிப்பிட்­டி­ருந்தார்.

சிங்­கள மக்கள் மாத்­திரம் தனித்து­வ­மாக செயற்­பட்­டார்கள் என்று அவர் பெரு­மை­யுடன் கூறியிருக்கிறார். ஜனா­தி­பதித் தேர்தல் முற்­றிலும் சுதந்­தி­ர­மா­கவும் எந்த வன் முறைகளும் இன்றி இடம்­பெற்­றி­ருந்­தன.

சமூக ஊட­கங்­களின் அத்­து­மீறல்கள் தவிர, வேறெந்த குறிப்பிடும்­ப­டி­யான வன்­மு­றை­களோ அத்­து­மீ­றல்­களோ, அழுத்­தங்­களோ இல்­லாமல் இடம்­பெற்ற முத­லா­வது தேர்தல் என்று கூறும்­ப­டி­யாக அது இடம்­பெற்­றது.

ஐரோப்­பிய ஒன்­றிய கண்­கா­ணிப்­பா­ளர்­களும், ஏனைய வெளி­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்­களும் இந்த தேர்தல் நடத்­தப்­பட்ட விதம் குறித்து பாராட்­டுக்­க­ளையும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

எல்லாம் முடிந்து ஒரு மாதம் கழித்து, தமிழ் மக்­களை சுதந்­தி­ர­மாக வாக்­க­ளிக்க விட­வில்லை என்ற குண்டைத் தூக்கிப் போட்­டி­ருக்­கிறார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ.

அவ்­வா­றாயின் தமிழ் மக்கள் அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் தான் வாக்களித்தனர் என்றே பொருள். அவ­ரது இந்தக் கருத்து அல்­லது குற்­றச்­சாட்டு பல விட­யங்­களை வெளிப்படுத்தி நிற்கிறது.

தமிழ், முஸ்லிம் மக்கள், ஜனா­தி­பதித் தேர்­தலில் அளித்த தீர்ப்பு அல்­லது ஆணையை அவரால்  இன்­னமும் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. ஜீர­ணித்துக் கொள்ள முடி­யாமல் இருக்கிறது. அத்­துடன், தமிழ், முஸ்லிம் வாக்காளர்­களின் மன நிலையை, எதிர்பார்ப்­பு­களை சரி­வர அவரால் புரிந்து கொள்ள முடி­யாமல் இருக்கிறது.

அவ­ரது கருத்து வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற பல விட­யங்­களில் இந்த இரண்டு விட­யங்­களும் முக்கியமானவை.

ஜனா­தி­பதித்  தேர்­தலில் தமிழ் மக்களின் அல்­லது முஸ்லிம் மக்­களின் மீது, எந்­த­வொரு தரப்பும் அழுத்­தங்­களைக் கொடுக்­கவோ, ஆதிக்கம் செலுத்­தவோ இல்லை.

தமிழ், முஸ்லிம் கட்­சிகள் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரித்­தது உண்மை. அவ­ருக்­காக வாக்­கு­களைக் கோரி­யது உண்மை. அதற்­காக அவர்­களின் வாக்கு­களை அளிக்­கின்ற சுதந்­திரம் அல்­லது சுயா­தீ­னத்­தன்மை மீது யாருமே ஆதிக்கம் செலுத்­தி­யி­ருக்­க­வில்லை.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு தமிழ்க் கட்­சி­களை குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு போன்ற கட்­சிகள் பிடிக்­காது. அதனை அவர் கிடைக்­கின்ற சந்­தர்ப்­பங்­களில் எல்லாம் வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கிறார். கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த ஊடகச் சந்­திப்பில் ஆளுநர் நியமனத்தில் இருந்த இழு­ப­றிக்குக் கூட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை குற்­றம்­சாட்டத் தவ­ற­வில்லை.

கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்­ப­டு­வதில் சிக்கல் வரும் என்று ஆளுநர் பத­வியை ஏற்கப் பலரும் முன்­வ­ர­வில்லை என்று அவர் குற்­றச்­சாட்டை சுமத்­தினார்.

பொருத்­த­மான ஒரு ஆளு­நரைத் தெரிவு செய்ய முடி­யாத  இய­லா­மையைக் கூட, கூட்­ட­மைப்பின் மீது சுமத்தி விடு­கின்ற அள­வுக்கு, தமிழ்க் கட்­சி­களை விமர்­சிப்­பது வழக்­க­மா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது.

ஆனால், தமிழ்க்­கட்­சிகள், சுதந்­தி­ர­மாக வாக்­க­ளிக்க  தமிழ் மக்­களை அனு­ம­திக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ளக் கூடி­ய­தல்ல.  

சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுத்த முடிவு கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு சீற்­றத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. அவர் கூட்ட­மைப்பின் ஆத­ரவைப் பெற முடியும் என்று எதிர்­பார்த்­தி­ருக்­கவும் இல்லை. அவர் சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் வெற்றி பெறவே திட்­ட­மிட்­டி­ருந்தார். கூட்­ட­மைப்பு அவ­ருக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருந்தால் சிங்­கள மக்­களின் வாக்குகள் தான் குறைந்­தி­ருக்­குமே, தவிர, அவ­ரது வெற்­றியை பிர­மாண்­டப்­படுத்தியி­ருக்­காது.

அடுத்து, சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிக்க கூட்­ட­மைப்பு எடுத்த முடி­வினால் தான் அல்­லது கூட்­ட­மைப்பு வழி­காட்­டி­யதால் தான், தமிழ் மக்கள் இந்த முடிவை எடுத்­தார்கள் என்று ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இப்­போதும் நினைத்துக் கொண்­டி­ருந்தால் அது அவ­ரது அறி­யாமை தான். தமிழ் மக்கள் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு வாக்­க­ளிக்க முடிவு செய்து விட்­டனர் என்­பதை உணர்ந்து கொண்ட பின்னர் தான், கூட்­ட­மைப்பும் அந்த வழியில் செல்ல முனைந்­தது. இது தான் உண்­மை­யான நிலை.

கோத்­தா­பய ராஜபக் ஷ தொடர்­பாக தமிழ் மக்­க­ளுக்கு இருந்த அச்சம், அவ­நம்­பிக்கை, ஏமாற்றம், எல்லாம் சேர்த்தே அவ­ருக்கு எதி­ரான ஆணையை வழங்கக் கார­ண­மாக இருந்­தது.     

தன்னை தமிழ், முஸ்லிம் மக்கள் முழு­மை­யாக நிரா­க­ரித்­ததை ஜனா­தி­ப­தி­யினால் இன்­னமும் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. அந்த குறை­யு­ணர்வில் இருந்து அவரால் வெளியே வரவும் முடி­யாமல் இருக்­கி­றது.

அனு­ரா­த­புர- ருவன்­வெ­லி­சா­யவில் நிகழ்த்­திய முத­லா­வது உரையில் தொடங்கி, ஊடக ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்பு வரை அவர் பல சந்­தர்ப்­பங்­களில், தனக்கு தமிழ், முஸ்லிம் வாக்­குகள் கிடைக்­க­வில்லை என்­பதை வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கிறார்.

அந்த ஏமாற்­றத்தை அவர், தமிழ், முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்­காமல் போனாலும் அவர்­க­ளுக்கும் தானே ஜனா­தி­பதி என்று கூறு­வதன் மூலம் நிவர்த்தி செய்ய முனை­கிறார்.

இது அவர் சமா­ளிப்­புக்­காக கூறிக் கொள்­ளு­கின்ற விட­யமா அல்­லது எல்­லோ­ருக்­கு­மான ஜனா­தி­ப­தி­யாக இருக்க வேண்டும் என்று சர்­வ­தேசம் கூறி­வரும் அறி­வு­ரையின் விளைவா என்­பது தெரி­ய­வில்லை.

எது எவ்­வா­றா­யினும், இதற்கு முன்­பி­ருந்த எந்­த­வொரு ஜனா­தி­ப­திக்­குமே, சர்­வ­தேச சமூகம், அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்­கு­மான ஜனா­தி­ப­தி­யாக செயற்­பட வேண்டும் என்ற அறி­வு­ரையைக் கூறி­ய­தில்லை. 

தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு அவ்­வா­றான ஒரு அறி­வு­ரையை சர்­வ­தேசம் கூறு­கி­றது என்றால், அதற்குக் காரணம், ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ், முஸ்லிம் மக்­களால் அவர் நிரா­க­ரிக்­கப்­பட்­டது தான்.

தமிழ் மக்­களால் ஏற்றுக் கொள்­ளப்­ப­டாத ஒரு ஜனா­தி­ப­தி­யாக, தெரிவு செய்­யப்­பட்ட நிலையில், தன்னை சிங்­கள மக்­களின் தனித்­து­வத்­தினால் வெற்றி பெற்ற தலை­வ­ராக தொடர்ந்தும் அவர் வெளிப்­ப­டுத்தி வரு­கிறார்.

அவர் இன்­னமும் கூட தமிழ், முஸ்லிம் மக்­களின் மன விருப்­பங்­க­ளையோ, ஆழ்­மன அபி­லா­ஷை­க­ளையோ நாடி பிடித்துப் பார்க்­க­வில்லை. 

எதற்­காக தனக்கு தமிழ், சிங்­கள வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிக்­க­வில்லை என்­பதைக் கூட, புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை.

தன்னை ஒரு யதார்த்­த­பூர்­வ­மான தலை­வ­ராக காட்டிக் கொள்ளும் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு, புரி­யாத அந்த உண்மை-  இன்­னமும் அர­சி­யலில் கூட இறங்­காத பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவின் இளைய மகன் றோஷித ராஜபக் ஷவுக்கு நன்­றா­கவே புரிந்­தி­ருக்­கி­றது.

அவர் அண்­மையில், தொலைக்­காட்சி ஒன்­றுக்கு அளித்­தி­ருந்த பேட்­டியில், “வடக்கில் எங்­க­ளுக்கு யாரும் வாக்­க­ளிக்­க­வில்லை. அது வடக்கு மக்­களின் தவறு அல்ல. நாங்கள் செய்த தவறு தான்.

வடக்கில் வாழும் மக்­களின் தேவை­களை அடை­யாளம் காண­வில்லை. நாங்கள் அவர்­களின் தேவை­களை அறிந்து கொள்ள வேண்டும். அந்த மக்­களின் மனங்­களை வெல்ல நாம் என்ன செய்ய வேண்டும் என திட்­ட­மிட வேண்டும். 

தமிழ் மக்­க­ளினால் எங்­க­ளுக்கு பயன் இல்லை என சிந்­திக்கும் அர­சியல் மன­நி­லையே உள்­ளது.

நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றால் இணைந்து செயற்­பட வேண்டும். அவர்­களை பிரிக்கக் கூடாது.” என்று கூறி­யி­ருந்தார்.

ஆனால், ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவோ, தமிழ் மக்கள் சுதந்­தி­ர­மாக வாக்­க­ளிக்க முடி­யாமல் தடுக்­கப்­பட்­டனர் என்றும் இல்­லையேல், தமக்கு வாக்­க­ளித்­தி­ருப்­பார்கள் என்­பது போலவும் நியா­யப்­ப­டுத்த முனை­கிறார்.

இதி­லி­ருந்து அவர் தோல்­வியில் இருந்து  பாடம் கற்கவோ, தமிழ் மக்களின் பிரச்சினையை கையாளும் அணுகுமுறைகளை வகுத்துக் கொள்ளவோ தயாராக இல்லை என்றே உணர்ந்து கொள்ள முடிகிறது.

சிங்கள மக்களின் தனித்துவமான வாக்குகளால் அவர் நாட்டின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் எண்ணுவது போல, எல்லா மக்களுக்கும் நான் தான் ஜனாபதிபதி என்று கூறிக் கொள்ளும் தகைமை அவருக்கு இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.

ஏனென்றால், நாட்டின் கணிசமான பகுதியினரான தமிழ் பேசும் மக்களின் மன உணர்வுகளை,  அவர்களின்  பிரச்சினைகளைச் சரியாக அடையாளம் காணக் கூடிய தலைவராக அவர் இன்னமும் உருவாகவில்லை.

அவ்வாறான தகைமையைப் பெறும் வரையில் நடைமுறைச் சாத்தியமில்லா திட்டங்களையும், செயல்முறைகளையும் பற்றி பேசிக் கொண்டிருக்கத் தான் முடியுமே தவிர, பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22