250 பூனைகளை வளர்க்கும் இல்லத்தரசி!

Published By: Digital Desk 3

25 Dec, 2019 | 03:40 PM
image

இந்தோனேஷியாவின் மேற்கு ஜவாங் பகுதியில் உள்ளது பாருங் என்ற கிராமத்தில் 45 வயதுடைய அகஸ்டா தன் கணவர் முகமது லுப்தியுடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 250க்கும் மேற்பட்ட பூனைகளை பராமரித்து வருகிறார்.

புகைப்படம் ராய்ட்டர்ஸ்

அகஸ்ட்டாவைச் சுற்றி பூனைக்கூட்டங்கள் சூழ்ந்தவாறே இருக்கின்றன.

புகைப்படம் ராய்ட்டர்ஸ்

பூனைகளுக்கான காப்பகம் போலவே செயல்படும் அகஸ்டாவின் வீட்டில் எங்கு பார்த்தாலும் பூனைகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன.

புகைப்படம் ராய்ட்டர்ஸ்

சிறு வயதில் இருந்தே பூனைகள் மேல் பாசம் கொண்ட அகஸ்ட்டா, வீதிகளில் சுற்றித்திரியும் பூனைகளை கண்டால் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துவிடுகிறார்.

புகைப்படம் ராய்ட்டர்ஸ்

மருத்துவம், உணவு, சுகாதாரம் என ஒரு நாளைக்கு 72 டொலர்கள் வரை பூனைகளுக்காக அவர்கள் செலவிட்டு வருகின்றனர்.

புகைப்படம் ராய்ட்டர்ஸ்

புகைப்படம் ராய்ட்டர்ஸ்

அதிக பூனைகள் இருப்பதால் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை 5 பணியாளர்கள் வீட்டை சுத்தம் செய்வதாகவும் அகஸ்ட்டா தெரிவித்துள்ளார்.

புகைப்படம் ராய்ட்டர்ஸ்

மேற்கு ஜாவா மாகாணத்தின் போகோரில் உள்ள என்ற பூனை தங்குமிடத்தில் பூனைகள் பூனை போட்டிகளில் வென்று பதக்கங்களும் பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right