“ஆண­வத்தை நீக்­கி­னாலே சாதனை சிக­ரத்தை தொடலாம்”: திரு­மதி சிவ­நந்­தினி துரை­சா­மி­யுடன் சிறப்பு நேர்­காணல்

Published By: J.G.Stephan

24 Dec, 2019 | 02:45 PM
image

பல நூற்­றாண்­டு­க­ளாக ஆணா­திக்க சிந்­த­னையை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட சமூ­கத்தில் சிக்கித் தவித்த பெண்கள், இன்று சாதனைப் பெண்­க­ளாக வலம் வரு­கின்­றனர். ஆண்­களை விட பெண்கள் சாதனைப் படைக்கும் போது அது வர­லா­றாக மாறு­கின்­றது. இவர்­களின் வளர்ச்­சி­யா­னது சக­ல­ரையும் நெஞ்சை உயர்த்தி பெரு­மிதம் கொள்ள வைக்­கின்­றது.

அவ்­வாறு சாதனைப் பெண்­களின் வரி­சையில் ஒரு­வ­ராகத் தான் திரு­மதி சிவ­நந்­தினி துரை­சாமி காணப்­ப­டு­கின்றார். இலங்­கையில் முழு­மை­யாக பெண்­களின் தலை­மைத்­து­வத்தால் கட்­ட­மைக்­கப்­பட்ட,  சைவ மங்­கையர் கழ­க­மா­னது பல்­வேறு சாதனை சுவ­டு­களை சுமந்து வெற்­றிப் ­ப­ய­ணத்தை தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

கழ­கத்தின் ஸ்தாபகர்­களில் ஒரு­வரின் வாரி­சான திரு­மதி சிவ­நந்­தினி துரை­சாமி  கழ­கத்தில் 50 வருட சேவையை முன்­னெ­டுத்­துள்­ள­துடன் ஒரு முகா­மை­யா­ள­ராக 25 வரு­டத்தை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­கின்றார். சைவ மங்­கையர் கழ­கத்தின் முக்­கிய அங்­க­மாக காணப்­ப­டு­வது தான் கொழும்பு வெள்ளவத்­தையில் அமைந்­துள்ள பிர­பல பாட­சா­லை­யான சைவ மங்­கையர் கல்­லூரி ஆகும்.

இந்த கல்­லூரி மாண­வி­கள்­ ஒவ்­வொரு வரு­டமும் கல்வி மற்றும் ஏனைய பாட விதா­னங்­களில்  வர­லாற்று சாத­னை­களை செய்து வரு­கின்­றனர். அது மாத்­தி­ர­மன்றி சைவ மங்­கையர் கழ­கத்தில் மேலும் பல அங்­கங்­க­ளாக டாக்டர். மரியா பாலர் பாட­சாலை, வயோ­திப பெண்­க­ளுக்­கான முதியோர் பரா­ம­ரிப்பு இல்லம், பெண்கள் விடுதி மற்றும் மாணவ விடுதி என்­ப­னவும் காணப்­ப­டு­கின்­றன.

இந்த ஒவ்­வொரு அமைப்பும் இன்று வெற்­றி­க­ர­மாக இயங்­கி கொண்­டி­ருக்­கின்­றது. ஒரு மகளிர் தலை­மைத்­து­வத்தின் கீழ் பல சவால்­க­ளையும் தாண்டி சாதனை சிக­ரத்தை நோக்கி பய­ணிக்­கின்­றது.இவ்­வாறு சாதனைப் பெண்­ணாக இருக்­கின்ற சைவ மங்­கையர் கழ­கத்தின் முகா­மை­யா­ள­ராக 25வருட சேவையை நிவர்த்தி செய்­கின்ற திரு­மதி சிவ­நந்­தினி துரை­சாமி வீர­கே­சரி நாளி­த­ழுக்கு விசேட நேர்­கா­ணலை வழங்­கி­யி­ருந்தார்.



அந்த நேர்­கா­ணலின் முழு விபரம் இதோ,

கேள்வி: சைவ மங்­கையர் கழ­கத்தின் உரு­வாக்­கமும் அதற்­கான பின்­புல கார­ணிகள் குறித்தும் ஒரு சிறிய விளக்­கத்தை வழங்க முடி­யுமா?

பதில்: 1930 ஆண்டு ஆங்­கி­லேயர் ஆதிக்­கத்தின் கீழ் இலங்கை இருந்­த­போது, ஒரு சில பெண்­ம­ணிகள் தங்­க­ளு­டைய வருங்­கால சந்­த­தி­யினர் தமி­ழையும் இந்து சம­யத்­தையும் மறந்து விடப் போகி­றார்கள் என்ற அச்­சத்தை கொண்­டி­ருந்­த­மையால் சைவ மங்­கையர் கழ­கத்தை ஸ்தாபித்­தார்கள். அதன் குறிக்­கோள் தமிழ்­மொ­ழி­யையும் இந்து சம­யத்­தையும்    பேணிப் பாது­காக்க வேண்டும் என்­ப­தாகும்.

இது முழு­மை­யாக பெண் ஸ்தாப­க­ர்­களால் மாத்­திரம் உரு­வாக்­கப்­பட்ட ஒரு அமைப்­பாகும். கழக ஸ்தாப­கர்­க­ளாக இருந்­த­வர்­க­ளின் கண­வன்­மார்­களும் சிறந்த பங்­க­ளிப்பை   வழங்­கி­யதன் ஊடாக கழ­கத்தின் குறிக்­கோள்­களை நிறை­வேற்றும் முக­மாக சைவ மங்­கையர் வித்­தி­யா­லயம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

சைவ மங்­கையர் கழகம் அதன் குறிக்­கோள்­களை நிறை­வேற்றும் முக­மாக ஒரு சில அமைப்­பு­களை, பெண்கள் நலன் சார்ந்­த­வை­யாக ஆரம்­பித்­தது.

அந்­த­வ­கையில் ஆங்­கி­லே­யர் ஆட்­சிக் ­கா­லத்தில் நாடகம், சங்­கீதம் பர­த­நாட்­டியம் ஆகி­யவை பாடங்­க­ளாக கற்­பிக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றை பாடங்­க­ளாக சேர்க்க முடி­யா­தென கூற,  சங்­கீ­தமும்  பர­த­நாட்­டியமும் வேண்டும் என்ற நோக்­கத்­தோடு இசை நடன கல்­லூ­ரியை 1945 ஆம் ஆண்டு ஆரம்­பித்து வைத்­தார்கள்.

அதற்­குப்­ பின்னர் 1952 ஆம் ஆண்­ட­ளவில் முன் பள்ளி ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்­நிலையில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பல இடை­யூ­றுகள் கார­ண­மாக கல்­லூ­ரியின் செயற்­பா­டுகள் ஸ்தம்­பி­த­மா­கி­ன.

1960 ஆம் ஆண்டு அர­சாங்கம் கொண்டு­வந்த மசோ­தாவை தொடர்ந்து  சமய சார்­பான கல்­லூ­ரிகள் யாவும் அர­சாங்க கல்­லூ­ரி­க­ளாக மாற­வேண்டும் என்ற நிர்ப்­பந்த நிலை ஏற்­பட்­டது. இருந்­த­போ­திலும் சைவ மங்­கையர் கழகம் அர­சாங்­கத்­துடன் போராடி கல்­லூ­ரியை ஒரு தனியார் பாட­சா­லை­யாக நடத்­தி­யது.

இவ்­வாறு பல்­வேறு சவால்­க­ளுடன் உரு­வாக்­கப்­பட்ட பாட­சா­லை­யா­னது இன்று வன் ஏ. பி. என்று சொல்­லக்­கூ­டிய முதல்­தர பாட­சா­லை­யாக விளங்­கு­கின்­றது.10 இற்கும் குறைந்த மாண­வி­க­ளுடன் ஆரம்­ப­மாகி இன்று 2400 மாண­வி­களை கொண்ட முதல்­தர பாட­சா­லை­யாக எமது கல்­லூரி விளங்­கு­வ­தோடு அன்­றி­லி­ருந்து இன்­று­வரை முழு­மை­யான பெண்­ணிய தலை­மைத்­து­வத்தை கொண்ட அமைப்­பாக செயற்­பட்டு கொண்­டி­ருக்­கின்­றது.

கேள்வி: இலங்­கையில் பெண்­ணிய தலை­மைத்­து­வமும்- அதில் சைவ மங்­கையர் கழ­கத்தின் வகி­பாகமும் எவ்­வ­கை­யான பங்­க­ளிப்பை செய்­வ­தாக நினைக்­கின்­றீர்கள்?  

பதில்: இந்த தலை­மைத்­துவ ஒப்­பீட்டில் குறைந்தள­வா­கவே பெண்கள் நிற்­கின்­றார்கள் என நான் கரு­து­கின்றேன். பெண்கள் எவ்­வ­ளவு கஷ்­டப்­பட்­டாலும் இன்­றைய கால­கட்­டத்தில் பல்­வேறு துறை­களில் தங்­களை நிரூ­பித்துக் கொண்டு வரு­கின்­றனர் என்று கூறினால் அது மிகை­யா­காது. அத­ன­டிப்­ப­டையில் கல்­வித்­து­றையில் பெண்கள் சுய கௌர­வத்­தோடு வள­ர­வேண்டும் என்று, ஒரு வழி­காட்­டி­யாக சைவ மங்­கையர் கழ­கமும் அதன் முக்­கிய ஸ்தாப­னங்­களும், சைவ மங்­கையர் வித்­தி­யா­ல­யமும் முழு பங்­க­ளிப்பை ஆற்றி வரு­கின்­றது.

ஏன் இந்த வித்­தி­யா­லயம் ஸ்தாபிக்­கப்­பட்­டது,  ஏன் இந்த வித்­தி­யா­ல­யத்தை எங்­க­ளு­டைய ஸ்தாப­கர்கள் உரு­வாக்­கி­னார்கள் என்­ப­தற்கு சில கார­ணங்கள் இருக்­கின்­றன. மகாத்மா காந்தி கூறிய ஒரு முக்­கிய கொள்­கையை இவர்கள் அடித்­த­ள­மாக வைத்து இந்த வித்­தி­யா­ல­யத்தை ஆரம்­பித்­தார்கள்.

ஒருவள் குழந்­தைக்கு கல்­வியை புகட்­டினால் அது முழு குடும்­பத்­தையும் சேரும் என்ற ஒரு பெரு நோக்­கோடு அவர் அதைக் கூறினார். அதே வேளையில் ஒரு ஆண் குழந்­தைக்கு கல்­வியை புகட்­டினால் அது தனி மனி­த­னுக்­கான கல்­வி­யாக போய்ச்­சேரும் எனச் சொன்னார்.

 இதை கருப்­பொ­ரு­ளாக வைத்து சைவ மங்­கையர் வித்­தி­யா­ல­யத்தை பெண்­க­ளுக்கான ஒரு பாட­சா­லை­யாக அமைக்க வேண்டும் என்று அவர்கள் ஆரம்­பித்து வைத்­தார்கள். இது மிக முக்­கி­ய­மான ஒரு அம்­ச­மாக எனக்கு தோன்­று­கி­றது. அதா­வது பெண் கல்­வியின் மகத்­து­வத்தை 1932ஆம் ஆண்டு அவர்கள் அறிந்து அதை நடை­மு­றைப்­ப­டுத்தி இன்று ஆயி­ரக்­க­ணக்­கான மாண­விகள் எங்­க­ளு­டைய கல்­லூ­ரியில் இருந்து வெளியேறி சமூ­கத்­துக்கு பங்­காற்­று­வதை நாங்கள் கண்­ணா­ரக்­கண்டு மகிழ்ச்சியடை­கின்றோம்.

கேள்வி: இன்­றைய இளம் தலை­முறை மங்­கை­யர்கள் எதிர்­கொள்ளும் முக்­கிய சவா­லாக இருப்­பது என்ன?

பதில்: பல சவால்­களை அவர்கள் எதிர்­நோக்­கு­கின்­றார்கள். குறிப்­பாக வீட்­டி­னதும் நாட்­டி­னதும் பொரு­ளா­தார முன்­னேற்­றத்தில் அவர்கள் பெரும்­பங்­காற்றி வரு­வதால், தங்கள் தங்கள் குடும்­பங்­களை சற்று மறக்க வேண்­டி­ய­தாக இருக்­கி­றது. தங்­க­ளு­டைய குடும்­பத்தை வளர்க்க  வேண்டும் என்ற ஒரு முக்­கிய நோக்­கத்தை அவர்கள் சற்று பின்­தள்ளி, குடும்பம் சார்ந்த முன்­னேற்­றத்தை மட்டும் கருதி வரு­வது ஒரு பெரிய சவா­லாக இருக்­கி­றது. இதனால் பொது செயற்­பா­டு­களில் தங்­களை ஈடு­ப­டுத்தி கொள்ளும் வீதம் குறை­வ­டைந்த நிலை­யி­லேயே உள்­ள­தெ­னலாம். மேலும் இன்றைய கால­கட்­டத்தில் தொழில்நுட்ப செய­லி­க­ளுக்கு இளம் தலை­மு­றை­யினர் அடி­மை­யாகி, அத­னுடன் செல­விடும் நேரம் மிக அதி­க­மாக உள்­ளது. இந்த சாதன பயன்­பா­டுகள் கார­ண­மாக சிறு­ வ­யது குழந்­தைகள் கூட தனித்­து­வி­டப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. வளர்ந்து வரும் தொழில்­நுட்ப வளர்ச்­சி­யா­னது இந்த மாற்­றங்­களை நோக்க வேண்­டி­ய­தாக இருக்­கின்­றது. ஏனென்றால் குழந்­தை­களை பரா­ம­ரிப்­பது ஒரு தாயின் முக்­கிய நோக்­க­மாக இருக்க வேண்டும். நாங்கள் பிறந்­தது வளர்ந்­தது எங்­க­ளு­டைய பெற்­றோர்­க­ளு­டைய கண்­ணோட்­டத்தில்.  ஆனால் தற்­போ­தைய சூழலில் அநே­க­மான குழந்­தை­க­ளுக்கு அந்தப் பாக்­கியம் இல்லை. ஆகவே ஒரு தாய் என்­பவள் குழந்­தை­யுடன் முழு நேரத்­தையும் செல­வி­ட­வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தா­கின்­றது.

கேள்வி: கலவன் பட­சா­லை­களை விட தனித்­துவ பாட­சா­லை­முறை மாண­வர்­க­ளி­டையே எவ்­வா­றான ஆளு­மை­களை கட்­ட­மைக்­கின்­றது?

பதில்: ஆரம்ப காலம் தொட்டு இது தனித்­துவ பாட­சா­லை­யாக இருக்­கின்­றது. இந்த பாட­சா­லையில் நான் இரண்டு மூன்று வரு­டங்கள் ஆசி­ரி­ய­ராக கற்­பித்து வந்த கால­கட்­டத்தில் அந்தத் தனித்­துவம் மாண­வி­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மாக இருந்­ததை கண்டு கொண்டேன். ஏனெனில் ஆண் மற்றும் பெண் ­ம­ாண­வர்­க­ளுக்­கி­டை­யே­யான போட்­டிகள் இல்லை. அத்­தோடு இந்த மாண­வர்கள் எந்­த­வி­த­மான பாலின அடக்­கு­மு­றை­களையும் எதிர் கொள்­ளாமல் வளர்­வ­தனால் எதிர்­கால சிந்­த­னைகள் யாவும் அடக்­கு­முறை­களை புறந்­தள்ளி ஒரு சம உணர்வு மிக்க சிந்­த­னை­களை வளர்க்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

அவர்­க­ளி­டையே சுய ஒழுக்கம் சார் படிப்­பி­னை­களும், ஆளு­மை­களை வளர்க்கக் கூடிய படிப்­பி­னைகளும் அதி­க­மாக கற்­பிக்­கப்­ப­டு­வ­தோடு, சமூ­கத்தில் சம சிந்­தனை உணர்­வு­களை வளர்க்­கவும் தங்­க­ளு­டைய தேவை­களை நிறைவு செய்­யக்­கூ­டிய பண்­பு­களை முழு­மை­யாக வளர்ப்­ப­தற்கும் இந்த தனித்­துவ பாட­சாலை முறைமை உதவும் விதத்தை அனு­ப­வ­மூ­டா­கவே கண்­டுள்ளேன்.

கேள்வி: இலங்­கையில் பெண்­க­ளுக்­கான தலை­மைத்­துவ வகி­பாகம் குறித்த உங்­களின் பார்வை?  

பதில் : முக்­கி­ய­மான நோக்­கத்­தோடு பெண்­ம­ணிகள் தலை­மைத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு சுய தொழில்­களை செய்து வரு­வார்­க­ளே­யானால் அது சமூ­கத்துக்கான சேவை­யாக அமையும். அதே நேரத்தில் தங்கள் குடும்­பங்­க­ளையும் பரா­ம­ரிக்கக் கூடிய நிலை வரும். ஏற்­றத்­தாழ்­வுகள் இல்­லா­மலும் பெண்­ணா­னவள் முன்­னே­றலாம் என்­பது என்­னு­டைய கருத்து

கேள்வி: ஒரு பெண், தலை­மைத்­துவ பத­வியில் 25 வரு­டங்கள் வெற்­றி­க­ர­மாக பய­ணிப்­பது என்­பது இன்றைய சமூக சூழலில் இல­கு­வான விட­ய­மல்ல. இந்த வெற்றி பய­ணத்தில் முக்­கி­ய­மாக எதிர்­கொள்­ள­ வேண்­டிய சவால்கள் என்ன?

பதில்: சில சம­யங்­களில் சில­வற்றை செய்­தா­க­ வேண்டும். எதிர் நீச்சல் போட்­டா­வது நான் செய்ய வேண்­டிய நிலை­மை­களும்  இருந்­தன.  ஒரு கட்­டத்தில் நீ என்ன செய்தாய்? நீ ஏன் இதை செய்தாய்? என்ற கேள்­விகள் நிறை­யவே  இருக்கும். ஏனென்றால் நிர்­வாக­சபை குழுதான் கூடு­த­லாக கேள்­வி­களைக் கேட்டு நிர்ப்­பந்­தப்­ப­டுத்தக் கூடிய நிலைமை இருக்­கி­றது. அவ்­வாறு நிர்ப்­பந்­தங்கள் ஏற்­படும் போது வேலை­களை எந்­த­வித தவ­றுகளுமின்றி நிறைவு செய்­யக்­கூ­டிய வாய்ப்பு ஏற்­ப­டு­கி­றது.

கேள்வி: நீங்கள் வழி­ந­டத்தி செல்லும் சைவ மங்­கையர் கழ­கத்தின் எதிர்­காலதங திட்­ட­மி­டல்கள்?

பதில்: சிறப்­பாக இயங்க வேண்டும் என்­ப­துதான் எங்­க­ளு­டைய விருப்பம். இதுதான் எங்­க­ளு­டைய அவ­சியத் தேவையும் ஆகும். ஆனால் இந்த முன்­னேற்­றத்தில் எங்­க­ளு­டைய பங்கு என்­ன­வென்று நோக்­கினால், பகவத் கீதையில் கிருஷ்ண பர­மாத்மா சொல்­கிறார் சேவை செய், சேவை செய்­வது தான் உன்­னு­டைய கடமை. ஒரு எதிர்­பார்ப்புமின்றி பலா­ப­லன்­களை கரு­தாமல் சேவை செய், நீ செய்யும் சேவையை எம்­பெ­ரு­மானின் திரு­வ­டி­களில் அர்ப்­ப­ணித்து செய் என்று கூறிய அந்த முக்­கிய அம்­சத்தை மனதில் வைத்து நாங்கள் சேவை செய்­கிறோம். எல்லாம் சிறப்­பாக நடை­பெறும் என்­பதில் ஐய­மில்லை.

கேள்வி: பாரதி கண்ட புதுமைப் பெண்கள் ஏரா­ள­மாக வந்­து­விட்­டார்கள். அவர்கள் இன்றைய சமூ­கத்தின் வளர்ச்­சிக்கு மேலும் ஆற்ற வேண்­டிய பணிகள் எவை என நினைக்­கின்­றீர்கள்?

பதில்: புதுமைப் பெண் பழமை பெண் எங்­க­ளுக்கு தேவையா? என்ற ஒரு கேள்­வியை நான் உங்­க­ளிடம் கேட்க விரும்­பு­கிறேன். பழமை பெண்தான் புது­மை­யாக ஆகிறாள், புதுமைப் பெண் தான் பழ­மை­யி­லி­ருந்து எழுந்து வந்து இருக்­கிறாள். ஆனால் அவ­ளு­டைய தேவை­யான முக்­கிய கொள்­கை­களும், முக்­கி­ய­மான சேவை­களும் ஒரு­போதும் மாறாது. என்­னு­டைய கருத்­தின்­படி அவள்தான் குடும்­பத்­துக்கு மைய­மாக இருந்து முழு­மை­யாக நடத்­து­கிறாள். அந்த மையத்தில் இருந்து வில­கினால் அவளும் எல்­லா­வற்­றிலும் இருந்தும் வில­கி­ய­தா­கவே நான் கரு­துவேன். தன்­னு­டைய குடும்­பத்தை தன்­னு­டைய குழந்­தை­களை அவள் முன்­னேற்றி வந்­தாலே அவளும், சமூ­கமும் சிறப்­பாக இருக்கும். அதையே புதுமைப் பெண் என நான் கரு­து­கிறேன். பாரதி குழந்­தை­க­ளையும் சேர்த்து பாடி­யி­ருக்­கிறார். பெண்­ணையும் புது­மை­யாக படைத்­தி­ருக்­கிறார். அந்தப் படைப்­பு­களில் இந்தக் கருத்­துகள் உள்­ள­டங்கியிக்­கின்­றது என்­பதை நான் காண்­கின்றேன்.

கேள்வி: சைவ மங்­கையர் கழ­கத்­தி­லி­ருந்து வளர்ந்த பழைய மாண­வர்கள் கழக வளர்ச்­சிக்கு எவ்­வா­றான பங்­க­ளிப்பை செய்­கின்­றார்கள்?

பதில்:  இந்த கழ­கத்தில் வளர்ந்த  பழைய மாண­விகள் நன்றி உள்­ள­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். பாட­சா­லை­யி­னதும் இதர அமைப்­பு­க­ளி­னதும் வளர்ச்­சியில் அவர்­களும் தமது பங்கை சிறப்­பாக செய்­கி­றார்கள். அந்­த­வ­கையில் கழ­கத்தை முன்­னேற்ற வேண்டும், அதில் உள்ள கஷ்டங்களில் நாங்களும் பங்கேற்க வேண்டும் என்ற அந்த எண்ணம் அவர்களிடையே உள்ளது. அதனால்தான் ஒரு சில மூத்த பழைய மாணவர்கள் கழகத்தோடு சேர்ந்து எம்முடைய நிர்வாகசபை அங்கத்தவர்களாக செயற்பட்டு வருகிறார்கள்.

திருமூலரின் யான் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம் என்ற கூற்றுக்கிணங்க,  தாங்கள் பெற்ற நன்மைகளை எடுத்து  தங்களால் இந்த கல்லூரிக்கு செய்யக் கூடியவற்றை செய்யவேண்டும் என செய்து கொண்டு வரும் சேவையை பார்க்கும் போது  எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1958 -– 60 ஆம் ஆண்டுகளில் நான் இந்தக் கல்விக் கூடத்தில் ஆசிரியராக சேர்ந்து படிப்பித்த ஒரு சில மாணவிகள், இன்று நல்ல பதவிகளில் இருந்து முன்னேறி, நாட்டுக்கும் சேவை செய்து தங்களுடைய பழைய கல்லூரிக்கும் பேரும் புகழும் ஈட்டி நிற்பதை கண்ணாரக் கண்டு மகிழ்கிறேன்.

கேள்வி: வளர்ந்து வரும் இளந்தலைமுறையினர் வெற்றி பாதையில் செல்ல தங்களிடையே எவ்வாறான பண்புகளையும் பயிற்சிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது?  

பதில்: நாங்கள் மற்றவர்களுடன் போட்டி போடுவதை விடுத்து இன்றைய நீ நேற்றைய உன்னை விடவும் நாளைய நீ இன்றைய உன்னை விடவும் மேம்பட்டிருக்க உழைப்பது சிறப்பைத் தரும்” என நம்புகிறேன். இன்றைய நீ உன்னுடைய ஆணவத்தை விட்டு நாளைய நீயாக மாற அந்த ஆணவத்தை விட்டு செயற்பட்டாலே வெற்றியை நோக்கி நகரலாம் என நினைக்கின்றேன் என்றார்.

நேர்காணல்:

எஸ்.லோகேஸ்வரன்

படப்பிடிப்பு எஸ்.எம். சுரேந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22