சுதேச கலைகளின் வளர்ச்சிக்காக முழுமையான உதவி வழங்கப்படும் – ஜனாதிபதி

Published By: Daya

24 Dec, 2019 | 02:17 PM
image

சுதேச கலைகளினதும் கலைஞர்களினதும் மேம்பாட்டிற்காகத் தனது பதவிக்காலத்தில் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். எமது பாரம்பரியங்களையும் நாட்டின் கலாச்சாரம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாக்கும் கொள்கையில் அதற்காகத் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்  கலைஞர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கலைஞர்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கலைஞர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ரன்மினித்தென்ன சினிமா கிராமம் கடந்த காலங்களில் உரியப் பிரயோசனம் பெறப்படாது கைவிடப்பட்டிருந்தது. சுதேச கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக அதிலிருந்து பயன்பெறுமாறு ஜனாதிபதி கலைஞர்களிடம் கேட்டுக்கொண்டார். 

பல்வேறு நிறுவனங்களில் தொழில்வாய்ப்புகளுக்காக ஆட்களைத் தெரிவு செய்யும்போது கலைஞர்களுக்கும் சந்தர்ப்பமளிக்கப்பட்டிருப்பது அவர்களது சேவைகளை மதிக்கும் வகையிலேயே ஆகுமென்றும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முன்னணி கலைஞர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30