3 ஆம் திகதி 5 மணி நேரம் சபை அமர்வு: சஜித்துக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி

Published By: J.G.Stephan

24 Dec, 2019 | 10:23 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் 3ஆம் திகதி கூடும்­போது சபா­நா­ய­க­ருக்கு இருக்கும் அதி­கா­ரத்தின் பிர­காரம் எதிர்க்­கட்சி தலைவர் ஆச­னத்தை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஒதுக்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் சபா­நா­யகர் அறி­வித்­துள்ளார் என்று  சபா­நா­யகர் அலு­வ­லகம் தெரிவித்­துள்­ளது. 

ஜன­வரி 3ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கூட இருக்கும் நிலையில் அது­தொ­டர்­பாக மேற்­கொள்­ள­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக கட்சி தலை­வர்கள் கூட்டம் நேற்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் இடம்­பெற்­றது. இங்கு எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் தொடர்­பாக சபா­நா­யகர் அலு­வ­லகம் விடுத்­துள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பாரா­ளு­மன்ற கட்சி தலை­வர்­களின் கூட்டம் நேற்று காலை பாரா­ளு­மன்ற வளா­கத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது எதிர்­வரும் ஜன­வரி 3ஆம் திகதி இடம்­பெற இருக்கும் 8ஆவது பாரா­ளு­மன்­றத்தின் 4ஆவது கூட்­டத்­தொடர் ஆரம்­பித்தல் மற்றும் ஜனா­தி­ப­தி­யினால் அர­சாங்­கத்தின் கொள்கை பிர­க­ட­னத்தை அறி­விப்­பது தொடர்­பாக மேற்­கொள்­ள­வேண்­டிய முறைகள் தொடர்­பாக தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஜனா­தி­ப­தி­யினால் அரச கொள்­கைத்­திட்­டத்தை வெளி­யிட்­டதன் பின்னர் பிற்­பகல் 12,30 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் ஒன்றை நடத்த இருப்­ப­துடன், அதன்­போது 2020 ஜன­வரி 7ஆம் திகதி முதல் சபை நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­ற­வேண்­டிய முறை­தொ­டர்­பாக கவனம் செலுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. ஜன­வரி 3ஆம் திகதி பிற்­பகல் 1மணி முதல் மாலை 6மணி­வரை பாரா­ளு­மன்றம் மீண்டும் கூடு­வ­தற்கு நேற்று இடம்­பெற்ற கட்சி தலைவர் கூட்­டத்­தின்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 

அதன்­போது புதிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபா­நா­யகர் முன்­னி­லையில் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­வது, சபா­நா­ய­கரால் சஜித் பிரே­ம­தா­சவை எதிர்க்­கட்சி தலை­வ­ராக உத்­தி­யோக பூர்­வ­மாக அறி­விப்பு செய்தல் மற்றும் அக்­கி­ரா­ச­னத்தில் இருந்து மேற்­கொள்­ள­வேண்­டிய வேறு விட­யங்­களை முன்­வைக்கும் ஒழுங்­கு­வி­தி­களை மேற்­கொள்­ளவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

(அத்­துடன் சபா­நா­ய­க­ருக்கு இருக்கும் அதி­கா­ரத்தின் பிர­காரம் ஜன­வாரி 3ஆம் திகதி சபை ஆரம்­பத்­தின்­போதே எதிர்க்­கட்சி தலைவர் ஆசனம் எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஒதுக்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கட்சி தலைவர் கூட்­டத்­துக்கு அறி­வித்­தி­ருந்தார்)

மேலும் ஜன­வாரி 3ஆம் திக­திக்கு முன்னர் பாரா­ளு­மன்ற சபை முதல்வர் பதவி மற்றும் ஆளுங்­கட்சி பிர­தம கொறடா பத­விக்­கு­ரி­ய­வர்கள் தொடர்­பாக தனக்கு அறி­விக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு சபா­நா­யகர் அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி கட்சி தலைவர் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்­த­வர்­க­ளிடம் அறி­வித்தார். 

 கட்சி தலைவர் கூட்­டத்­தின்­போது விசே­ட­மாக,  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்க கைது­செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கவ­னம்­செ­லுத்­தப்­பட்­டது. அவ­ரது கைதா­னது இது­வரை பின்­பற்­றி­வந்த பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யத்தை மீறும் செய­லாகும் என­பொ­து­வாக ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களின் நிலைப்­பா­டாக இருந்­தது. இது­தொ­டர்­பாக பொலிஸ்மா அதிபர் உட்­பட குறிப்­பிட்ட அதி­கா­ரி­களை சபா­நா­யகர் முன்­ன­லையில் அழைத்து அறி­வு­றுத்த நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அத்­துடன் கைது­செய்­யும்­போது இடம்­பெற்­றுள்ள செயற்­பா­டுகள் தொடர்­பாக பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் கவ­னத்தை செலுத்­தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில்  சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, தினேஷ் குணவர்த்தன, மஹிந்த அமரவீர மற்றும் டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, அஜித் பி பெரேரா, மனோகணேசன் மற்றும் நிரோஷன் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22