பூஜாபிட்டிய பிரதேசத்தில் 12 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிப்பு

Published By: MD.Lucias

04 Jun, 2016 | 01:12 PM
image

கண்டி பூஜாபிட்டிய பொது சுகாதார அதிகாரி பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் 12 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.

கடந்த மாதங்களில் இப்பிரதேசங்களில் பெய்து வந்த கடும் மழையின் பின்னர்  தற்போது டெங்கு நோய் பரவக்கூடிய அச்சம் காணப்படுவதாகவும் அவ்வலுவலகம் மேலும் தெரிவித்தது.

இதேவேளை பூஜாபிட்டிய ரம்புக்வெல, பொலகொட, பலிபான, ஹிங்குல்வெல போன்ற கிராமங்களிலிருந்து கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் என 23 நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் 12 நோயாளர்களே டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து டெங்கு நோய் (காய்ச்சல்) பரவுவதைத்தடுப்பதற்கு இப்பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் மக்களை தெளிவுபடுத்துவதற்காக விஷேட செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55