சுயாதீனப்படுத்தப்பட்ட நீதிமன்றத்தின்  மீது நம்பிக்கை உள்ளது  : சஜித் பிரேமதாஸ

Published By: R. Kalaichelvan

24 Dec, 2019 | 08:38 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள  பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு சுயாதீன நீதிமன்றம் சரியான நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது.

சர்வாதிகார ரீதியில் அதிகாரத்தை பிரயோகித்து ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க முடியாது என பாரர்ளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம் பெற்ற  ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களின் மதவழிபாடு நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு  ஆதரவாகவும்,  ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் பாரளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க  ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார். 

நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட அரசியல் பழிவாங்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதனை ஜனநாயக ரீதியில் நிறைவுக்குக்கொண்டு வருவது  அவசியமாகும்.

வீதி விபத்து  தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள  பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நாளை விடுதலை செய்வார் என்று அதிகளவில் எதிர்பார்த்துள்ளோம். சுயாதீனப்படுத்தப்பட்ட நீதித்துறை ஜனநாயகத்திற்கு எதிரான  செயற்பாடுகள் தலைதூக்கும் போது  சரியான தீர்வினை வழங்கியது. அதன் தொடர்ச்சி இன்று இடம்பெறும்.

சட்டவிரோதமான முறையில் இடம்பெற்ற கைது மற்றும் அரசியல் பழிவாங்கலுக்கு சட்டமார்க்கத்தின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். அரசியல் ரீதியான செயற்பாடுகள் மாறுபட்டதாக காணப்படலாம். ஆனால் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான குரல் ஒன்றாகவே காணப்பட வேண்டும்.

கடந்த வருடம்  அரசியல் நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து ஜனநாயகத்திற்காக போராடினோம். இன்று  மீண்டும் ஜனநாயகத்தின் இருப்பு குறித்து சவால் எழுந்துள்ளன.

ஜனநாயகத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கு  எழுகின்ற அமைதிவழி போராட்டத்தை ஒன்றுப்படுத்தி  ஜனநாயகத்தை பாதுகாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து  ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33