உலகில் நீண்ட தூரம் நடைபயணம் செய்ய நீங்கள் தயாரா? வரைபடம் இதோ!

23 Dec, 2019 | 04:16 PM
image

மண்னில் இருந்து விண்வரை பயணிக்கும் வகையில் போக்குவரத்து தொழில்நுட்பங்களில் சிகரம் தொட்டுள்ள மனிதன் ஆரம்ப காலத்தில் நடைபயணத்தில் பல கண்டங்களையும் கடந்திருந்தான்.

இன்று நடைபயணம் என்பது பொழுது போக்காகவும், உடற்பயிற்சியாகவும் மாறியுள்ள நிலையில் உலகில் நாம் நடைபயணமாக எவ்வளவு தூரம் பணயிக்கலாம் என்பது ஒரு வியப்புமிக்க விடயமாக உள்ளது.

இது தொடர்பில், பூமியில் மிக நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடிய ஒற்றை தூரம் எவ்வளவு என்பதை கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி  கணித்து  (interestingengineering) இன்ரஸ்டிங் இன்ஜினியரிங் எனும் பொறியியல் இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

  

அதன்படி, தென் ஆப்பிரிக்க நாட்டின் கடலோர கிராமமான எல் அகுல்ஹாசில் இருந்து வடக்கு ரஷியாவின் மகடான் நகர் வரை உள்ள தூரமே மனிதனால் எந்த ஒரு போக்குவரத்து சாதனத்தினதும் உதவியின்றி  நடந்து செல்லக்கூடிய துரமாகும்.

மொத்தமாக 14 ஆயிரம் மைல்கள் (23,068 Km) உடைய இந்த தூரத்தை கடக்க 3 ஆண்டுகள் எடுக்கும் அதே நேரம்  இந்த பயணம் முழு வழியும் பாலங்களைக் கொண்ட சாலைகளால் ஆனது என்பதால் எந்த நிலையிலும் ஒரு ஆற்றின் குறுக்கே செல்ல ஒரு சிறிய படகையேனும் பயன்படுத்த வேண்டிய ஏற்படாது என குறித்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், தேசங்கள் கடந்து செல்லும் இந்த பயணத்தின்போது பருவ நிலைகளுக்கு ஏற்றவாறு, உயிர் பிழைப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை எடுத்து செல்ல வேண்டும் என அந்த இணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right