அரசாங்கம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிட அரசியல் பழிவாங்கல்களிலேயே கவனம் செலுத்துகிறது - ஐ.தே.க 

Published By: R. Kalaichelvan

23 Dec, 2019 | 02:44 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலுக்கு முன்னர் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட மாட்டேன் என்றும், பொருட்களின் விலையதிகரிப்பிற்குத் தீர்வைப் பெற்றுத்தருவதன் ஊடாக மக்களின் இடர்ப்பாடுகளுக்கு நிவாரணம் அளிப்பேன் என்றும் உறுதியளித்தே ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் ஆட்சிபீடமேறிய பின்னர் அவரது செயற்பாடுகள் அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிர்மறையானவையாக உள்ளன. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பார்க்க அரசியல் பழிவாங்கல்களிலேயே அதிக கவனம் செலுத்தப்படுவதாகத் தோன்றுகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வீ.ஏ.ஹர்ஷனி சந்தருவனி, ஷாந்தனி பத்திரகே மற்றும் வீ.சந்தமாலி ஆகியோர் கூறிய கருத்துக்கள் வருமாறு:

நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற போதிலும் தற்போது எமது இல்லத்தை நிர்வகிக்கும் குடும்பத்தலைவிகள் என்ற அடிப்படையிலேயே இங்கு வந்திருக்கின்றோம்.

கடந்த எமது அரசாங்கத்தில் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதாகக்கூறி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய ஆளுந்தரப்பினர் கூச்சலிட்டனர். ஆனால் இப்போது பெரும்பாலான மரக்கறிகளின் விலைகள் 600 ரூபாவை விடவும் அதிகரித்திருக்கின்றன. இதற்குத் தீர்வு என்னவென்று அரசாங்கத்தைக் கேட்கின்றோம்.

இந்தப் பண்டிகைக் காலத்தில் மக்கள் அவற்றை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதிலும் பார்க்க பொருட்களின் விலைவாசி ஏற்றத்தை எவ்வாறு சமாளிப்பது என்றே பெருமளவில் கலக்கமடைந்திருக்கின்றனர்.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தேர்தலுக்கு முன்னர் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட மாட்டேன் என்றும், பொருட்களின் விலையதிகரிப்பிற்குத் தீர்வைப் பெற்றுத்தருவதன் ஊடாக மக்களின் இடர்ப்பாடுகளுக்கு நிவாரணம் அளிப்பேன் என்றும் உறுதியளித்தே ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் ஆட்சிபீடமேறிய பின்னர் அவரது செயற்பாடுகள் அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிர்மறையானவையாக உள்ளன. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பார்க்க அரசியல் பழிவாங்கல்களிலேயே அதிக கவனம் செலுத்தப்படுவதாகத் தோன்றுகிறது என இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54