கெக்கிராவ மதடுகம பகுதியில் புதையல் தோண்டிய நால்வரை பொலிஸார் கைது  செய்துள்ளனர்.

மதடுகம பகுதியில் உள்ள வீடொன்றின் அருகிலேயே குறித்த புதையல் தோண்டும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் உள்ள பெண், அவருடைய மகன் மற்றும் இரண்டு நபர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை இன்று கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.