ராஜிதவின் மனு மீது இன்று விசாரணை

Published By: Vishnu

23 Dec, 2019 | 08:58 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் தன்னைக் கைது செய்ய முன்னர் முன் பிணையில் தன்னை விடு­விக்­கு­மாறு முன்னாள் அமைச்­சரும்  ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ராஜித்த சேனா­ரத்ன இரண்­டா­வது தட­வை­யா­கவும் தாக்கல் செய்த முன் பிணைக் கோரிய மனு இன்று விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது.  

கொழும்பு  பிர­தான நீதிவான்  நீதி­மன்றில் இம்­மனு மீது இன்று விசார­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஏற்­க­னவே ராஜித்த சேனா­ரத்ன தாக்கல் செய்த முதல் முன் பிணை கோரிய மனு­வா­னது, தான் கைது செய்­யப்­படப்போவது எந்த சட்டப் பிரிவின் கீழ்,  எந்த குற்­றத்­துக்­காக என்­பதை குறித்த மனு­விலோ அல்லது முன்­வைக்­கப்­பட்­டுள்ள சத்­தியக் கட­தா­சி­யிலோ மனு­தாரர் தெரி­விக்­காத நிலையில், அது தொடர்பில் தீர்­மானம் எடுக்க முடி­யாது எனக்கூறி கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜெய­ரத்ன கடந்த வெள்ளியன்று மனுவை  நிரா­க­ரித்­தி­ருந்தார்.

இந் நிலையில் அன்­றைய தினம்  மாலை மீள, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனா­ரத்­ன­வினால் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றுக்கு முன் பிணைக் கோரி இரண்­டா­வது தட­வை­யா­கவும் மனு தாக்கல் செய்­யப்­பட்­டது.  

முன்னர் முன்­வைத்த மனு நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து , 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணை சட்­டத்தின் 21 ஆவது அத்தியாயத்துக்கு அமை­வாக,  முன்­னைய மனுவில் இருந்த வழுக்­களை திருத்தி இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.  இந் நிலையில் திருத்தி மீள தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள முன் பிணை மனு இன்று விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது.

கடந்த  2019 நவம்பர் மாதம் ராஜித்த சேனா­ரத்­ன­வுடன், ஊடகவியலாளர் சந்­திப்பில் கலந்து­கொண்ட  சரத் குமார, அதுல சஞ்ஜீவ மத­நா­யக்க எனும் இருவர் வெள்ளை வேன் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்­ளிட்ட பல்வேறு குற்­றங்கள் தொடர்பில் வெளிப்படுத்தி­யி­ருந்­தனர். 

இந் நிலையில் குறித்த இரு­வரும் தண்­டனை சட்டக் கோவையின்  102,113,209,296,314,315,331,351,367  ஆகிய அத்தியாயங்களின் கீழ் குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.  

இந் நிலையில் குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில்  முன்னாள் அமைச்சர் ராஜித்­தவின்  சொற்­ப­டியே தாம்  வெளிப்­ப­டுத்­திய தகவல்களை கூறி­ய­தா­கவும், அதற்­காக தலா 10 இலட்சம் ரூபா பணம் பெற்­ற­தா­கவும் சந்­தேக நபர்கள் இரு­வரும் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலமளித்துள்ளனர். 

இந் நிலையிலேயே ராஜித்தவை சி.ஐ.டி. கைது செய்யலாம் எனும் சூழல் நிலவும் நிலையில் அவர் முன் பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08