யாழ் சிறைச்­சாலை முன்­பி­ருந்த சர்ச்­சைக்­கு­ரிய சிலை அகற்­றப்­பட்­டது..!

Published By: J.G.Stephan

22 Dec, 2019 | 03:56 PM
image

யாழ்ப்­பாணம் சிறைச்­சா­லைக்கு முன்­பாக வைக்­கப்­பட்­டி­ருந்த சர்ச்­சைக்­கு­ரிய சிலை பொது­மக்­களின் எதிர்ப்பால் நேற்று சனிக்­கி­ழமை அகற்­றப்­பட்­டது.

பொது­மக்­களால் புத்தர் சிலை எனவும் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் சங்­க­மித்­தையின் சிலை எனவும் கூறப்­பட்­டு­ பெரும்  சர்ச்சை  உரு­வா­னது. இத­னை­ய­டுத்து  அந்த சிலை­ சி­றைச்­சா­லைக்குள் எடுத்துச் செல்­லப்­பட்­டது. யாழ்ப்­பாணம் பண்ணைப் பகு­தியில் சிறைச்­சாலை கட்­டடத் தொகுதி உள்­ளது. அங்கு உதவி சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­க­ராகக் கட­மை­யாற்­று­ப­வரின் வழி­காட்­ட­லி­லேயே இந்தச் சிலை சிறைச்­சா­லைக்கு முன்­பாக வீதியில் அமைக்­கப்­பட்­டது.

இந்தச் சிலை கைதி ஒரு­வரால் 5 அடி உய­ரத்தில் அமைக்­கப்­பட்­டது. சிறைச்­சா­லைக்கு உள்ளே இருந்த இந்தச் சிலை நேற்று முன் தினம் வெள்­ளிக்­கி­ழமை சிறைச்­சா­லைக்கு வெளியே எடுத்து வரப்­பட்­டது. அந்தச் சிலையை மூடி துணியால் கட்­டப்­பட்­டி­ருந்­தது.

முன்­ன­தாக சங்­க­மித்தை தோணியின் மூலம் மாதகல் கரையில் வந்­தி­றங்­கிய காட்சி சிறைச்­சா­லையின் சிலை வைக்­கப்­பட்ட இடத்தில் வரை­யப்­பட்­டது.

இவ்­வாறு சிறைச்­சா­லைக்கு வெளியே வீதியில் பௌத்த சின்­னங்கள் அமைக்­கப்­ப­டு­வ­தற்கு கடும் எதிர்ப்பு எழுந்­தது. அந்த இடத்தில் நேற்றுக் காலை யாழ்ப்­பாணம் மாந­கர சபை உறுப்­பி­னர்­களும் பொது மக்­களும் கூடினர்.

அவர்­களின் எதிர்ப்பால் சர்ச்­சைக்­கு­ரிய சிலை அந்த இடத்­தி­லி­ருந்து சிறைச்­சா­லைக்குள் எடுத்துச் செல்­லப்­பட்­டது.

இதே­வேளை வட­மா­காண சபையின் முன்னாள்  உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் , சங்­க­மித்­தையின் வர­லாற்றை சித்­த­ரிக்கும் ஓவியம் போன்று , யாழ்ப்­பா­ணத்தை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்­ன­னான சங்­கி­லி­யனின் வர­லாற்றை சித்­த­ரிக்கும் ஓவி­யத்தை வரைய அனு­ம­திக்க வேண்டும் என சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­க­ரிடம் கோரினார்.  அதற்கு எழுத்து மூலம் அனுமதி கோருமாறும் , அதனை சிறைச்சாலை திணைக்களத்திடம் அனுமதி கிடைத்ததும் ஓவியம் வரைய அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56