சூரிய கிர­க­­ணத்தை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு..!

Published By: J.G.Stephan

22 Dec, 2019 | 02:29 PM
image

(ஆர்.விதுஷா)

 சந்­தி­ரனின் நிழல் பூமியின் மீது  விழும் போது ஏற்­படும் வானியல் நிகழ்­வான சூரி­ய­கி­ர­கணம் எதிர்­வரும் 26 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை நிகழவுள்­ளது.  

இந்த நிகழ்­வினை ஒன்­பது வரு­டங்­க­ளுக்கு பின்னர் முதல் தட­வை­யாக தெளி­வாக பார்­வை­யி­டக்­கூ­டிய வாய்ப்பு இலங்கை  வாழ் மக்­க­ளுக்கு கிடைக்­க­வுள்­ளது.   

அந்த வகையில் வட மாகா­ணத்தில்  முழு­மை­யான  சூரி­ய­கி­ர­க­ணத்தை  அவ­தா­னிக்­கக்­ கூ­டி­ய­தா­க­வி­ருக்கும்.  குறித்த  தினத்­தன்று  காலை  8.09  முதல்  11.21 வரை­யான  காலப்­ப­கு­தியில்   வடக்கில் சூரி­ய­கி­ர­க­ணத்தை 90 வீதம்  தெளி­வாக  அவ­தா­னிக்­கக்­ கூ­டி­ய­தா­க­வி­ருக்கும் என்று  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய  சூரி­ய­கி­ர­கணம்     இறு­தி­யாக   கடந்த 2010  ஜன­வரி  மாதம் 15  ஆம்  திக­தியே  தென்­பட்­டது. இருப்­பினும் இம்­முறை  முழு­மை­யான   கிர­க­ணத்தை  இலங்­கை­யர்கள்  அவ­தா­னிக்கக்­ கூ­டிய  வாய்ப்பு  கிட்­ட­வுள்­ளது.  

26  ஆம்  திகதி  நிக­ழ­வுள்ள  கிர­க­ணத்தை  தொடர்ந்து இனிமேல் 2031  மே மாதம் 21  ஆம் திக­தி­யி­லேயே  வடக்கைச் சேர்ந்த மக்­களால் இதனை அவ­தா­னிக்­கக் ­கூ­டி­ய­தா­க­ இருக்கும் என  ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.  

இந்த சூரி­ய­கி­ர­க­ணத்தை   பார்­வை­யி­டு­வ­தற்கு அனைத்து ஏற்­பா­டு­க­ளையும்  ஆய்­வா­ளர்கள்    மேற்­கொண்டு வரு­கின்­றனர்.   இதற்­கான  அனைத்து ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் தொழில்நுட்ப  மற்றும்  புத்­தாக்க  அமைச்சு  ஏற்­ப­டுத்­திக் ­கொ­டுத்­துள்­ளது. 

இருப்­பினும் இந்த கிர­க­ணத்தை வெறும் கண்­களால்  பார்ப்­பது  மிகவும் ஆபத்­தா­ன­தாகும் எனவும் வானியல் ஆய்­வா­ளர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.   

இந்த  சூரிய கிர­க­ணத்தை பார்­வை­யி­டு­வ­தற்­கான  ஏற்­பா­டு­களை யாழ்.  பல்­க­லைக்­க­ழகம், கொழும்பு பல்­க­லைக்­க­ழகம்  மற்றும்  பிர­யோக விஞ்­ஞான பிரிவு  இணைந்து மேற்­கொண்­டுள்­ளன.  

அந்தவகையில் யாழ்ப்­பாணம்  திரு­நெல்­வே­லியில் அமைந்­துள்ள   யாழ். பல்­க­லைக்­க­ழகம் மற்றும் கிளி­நொச்சி  ஆகி­ய­ பி­ர­தே­சங்­களில்  சூரிய கிர­கண அவ­தா­னிப்பு  முகாம்­களும் நிறு­வப்­பட்­டுள்­ளன.  

இவ்­வாறு  கிளி­நொச்சி மற்றும் யாழ்ப்­பாணம் ஆகிய பிர­தே­சங்­களில் கிர­க­ணத்தை பார்ப்­ப­தற்­காக தெரிவுசெய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு   2000  பிரத்­தி­யேக  பாது­காப்பு  கண்­ணா­டி­களும் வழங்­கப்­பட­வுள்­ளன.

அதேபோல், கொழும்பு மற்றும்  காலி ஆகிய பிர­தே­சங்­களில்   காலை  8.09  முதல்   11.22 மற்றும் 11.23   மணி­வ­ரை­யிலும்  பார்க்­கலாம்.

அத்­துடன் வவு­னியா, மன்னார்,   திரு­கோ­ண­மலை,  முல்­லைத்­தீவு, அநு­ரா­த­புரம், கண்டி,  மட்­டக்­க­ளப்பு, பதுளை, இரத்­தி­ன­புரி ஆகிய பிர­தே­சங்­க­ளிலும் சூரி­ய­கி­ர­க­ணத்தை பார்­வை­யி­டக்­ கூ­டி­ய­தா­க­வி­ருக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19