கதையின் நாயகனான பிரேம்ஜி அமரன்

Published By: Daya

21 Dec, 2019 | 10:24 AM
image

நகைச்சுவை நடிகர். இசையமைப்பாளர். பாடகர். குணச்சித்திர நடிகர் என பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் பிரேம்ஜி அமரன் இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா அவரது இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்க நடிகர் பிரேம்ஜி அமரன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக வலைத்தளத் தொடர் நடிகை ஸ்வயம் சித்தா நடிக்கிறார். இவர்களுடன் பிக் பொஸ் சீசன் 3 புகழ் ரேஷ்மா மற்றும் எண்பது வயது நடிகையான மாயக்கா ஆகியவர்களும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஆர்வி சரண் ஒளிப்பதிவு செய்ய. அந்தோணிதாசன் இசையமைக்கிறார். சூப்பர்டாக்கீஸ் என்ற பட நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் சமீர் பரத் ராம் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,“ சிறிய நகரங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரத்திலுள்ள பொலிஸ் நிலையங்களும், நீதிமன்றங்களும் எப்படி செயற்படுகின்றன என்பது குறித்தும், கதையின் நாயகன் பிரேம்ஜி அமரனுக்கும்,  80 வயது முதிய பெண்மணி ஒருவருக்கும் இடையே ஏற்படும் சுவராசியமான சம்பவங்களே இப்படத்தின் கதை.” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தமிழக நகரான அருப்புக்கோட்டையில் நடைபெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19