நத்தார் பண்டிகையை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு 

Published By: Daya

21 Dec, 2019 | 10:15 AM
image

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்புத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில், முப்படையினரும், பொலிஸாரும் விசேட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நத்தார் பண்டிகை காலங்களில், முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில், குறிப்பாகக் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளை உள்ளடக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பண்டிகை காலங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையடுத்து, முப்படையினர் மற்றும் பொலிஸாரிடமிருந்து கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்க முப்படையினரும், பொலிஸாரும் அந்தந்த பகுதிகளிலுள்ள விழிப்புணர்வு குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேவாலயங்களின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கொழும்பு பேராயர் அரசாங்கத்திடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58