பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம் : வாசுதேவ 

Published By: R. Kalaichelvan

20 Dec, 2019 | 04:45 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம். அத்துடன் கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்கு செல்லவேண்டும்.கூட்டணி இல்லாவிட்டால் அரசாங்கம் அமைக்க முடியாது என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டி போடவேண்டும் என்றும் கூட்டணி அமைத்துக்கொண்டு செல்ல தேவையில்லை என்றும் ஒருசில உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறானவர்கள் தங்கள் நிலைமையை விட தேவையற்றவிதமாக எண்ணுகின்றனர். ஆரம்பத்தில் இவர்கள் இவ்வாறு நினைப்பார்கள். ஆனால் சிறிது காலம் செல்லும்போது உண்மை நிலைமையை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அதனால் பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்கு முகம்கொடுக்கவேண்டும். கூட்டணி இல்லாவிட்டால் எங்களால் அரசாங்கம் அமைப்பது கடினம் என்பதே எனது நிலைப்பாடு.

அத்துடன் பொதுத் தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். என்னை பொறுத்தவரை மூன்றில் இரண்டு என்பது சாத்தியமில்லாத விடயம்.

அத்துடன் ஜனாதிபதி தெரிவிப்பதுபோல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியுமானால் எமக்கு பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளலாம்.

அரசாங்கத்துக்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதென்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஏனெனில் இதன் மூலம் அரசாங்கத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் நாட்டுக்கு தேவையான சட்ட திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம். என்றாலும் இது இலகுவான காரியமல்ல என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04